Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேபாளத்தில் விமான விபத்தில் தமிழகத் தமிழர்கள் பலியானதையிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

நேபாளத்தில் 19 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம், சுற்றுலாவை முடித்துவிட்டு காட்மாண்டு விமான நிலையத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கையில் மலையில் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து விமானத்தில் பயணம் செய்த 19 சுற்றுலாப் பயணிகளும் பலியாயினர் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.

இந்த விமான விபத்தில் மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்ற செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த விமான விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to நேபாள விமான விபத்தில் தமிழர்கள் பலி: ஜெயலலிதா அனுதாபம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com