Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லிபிய சர்வாதிகாரி சற்லைற்றுக்கள், கண்காணிப்பு கமேராக்களின் கண்களில் மண்ணைத்தூவி தப்பித்தது எப்படியென்ற மர்மம் மெல்ல மெல்ல விலகி வருகிறது. சுமார் 100 மீட்டர் தொலைவில் யாதொரு மின்னியல் கருவிகளுக்கும் ராடருக்கும் அகப்படாது பயணிக்கும் காரிலேயே அவர் தப்பியிருக்கிறார். கடாபியின் மாளிகையை முற்று முழுதாக சர்வதேச சற்லைற்றுக்கள் கண்காணித்தபடி உள்ள நிலையிலும் அவர் தப்பியுள்ளமை கவனிக்கத்தக்கது.

கடந்த 2008 ம் ஆண்டு மேற்கண்ட ஸ்ரெலத் பென்ஸ் இரகத்திலான விசேட காரை பிரான்சிய நிறுவனமான அமேஸ் உருவாக்கிக் கொடுத்துள்ளது. மொத்தம் 26.5 மில்லியன் யூரோவுக்கு பிரான்சிய – லெபனான் ஆயுத விற்பனையாளர் ஒருவர் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த விற்பனைக்கான படிவத்தில் இப்போதைய பிரான்சிய அதிபர் நிக்கொலாய் ஸார்கோஸி கையொப்பமிட்டுள்ளார்.

சர்வதேச பயங்கரவாதிகளான அல் குவைடாவிடமிருந்து தப்புவதற்காக கடாபிக்கு இக்கார் விற்கப்படுவதாக இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக அல் குவைடாவின் பெயரில் நடந்த இன்னொரு தவறு இதுவாகும். இதுபோலவே பயங்கரவாதம் என்ற பெயரைப் பயன்படுத்தி இலங்கை வன்னியில் போர்க்குற்றம் நிகழ்த்தப்பட்டது கவனிக்கத்தக்கது.

0 Responses to கடாபி தப்பிச்சென்றது விசேடமான ஸ்ரெலத் பென்ஸ் காரில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com