Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது படையினர் தாக்கியதை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளும் அறிந்திருந்தன என்று அண்மையில் கசிந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இருந்தபோதிலும், தாம் அறிந்தவற்றை பகிரங்கப்படுத்துவதை உதவி வழங்கும் நாடுகள் நிறுத்திக்கொண்டன என்று பிபிசிக்கு கிடைத்த விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன.

பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து விடுதலைப்புலிகளால் இலங்கை பாதுகாப்புப்படையினர் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களை எதிர்த்து பாதுகாப்புப் படையினர் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருந்ததாக பசில் ராஜபக்ஷ அவர்கள் கூறியுள்ளார்.

ஆனால், பதில் தாக்குதலாக நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்கள் பல பொதுமக்களைக் கொன்றதாகவும், அத்தகைய தாக்குதல்கள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் கடப்பாட்டை மீறுவதாக உள்ளதாகவும் அமெரிக்கத் தூதுவர் அவருக்கு சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் அமெரிக்கத் தூதரகம் வாசிங்டனுக்கு அனுப்பியிருந்த ஆவணங்கள் கூறுகின்றன.

இந்தத் தகவல்கள், இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் வெற்றிகொள்ளப்பட்டதாக அரசாங்கம் அறிவிப்பதற்கு இரு மாதங்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டிருந்தன.

பகிரங்கமாக கூறும் அறிக்கைகளுக்கு மாறாக, தாம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியதாக இலங்கை அரசாங்கம் உதவி வழங்கும் நாடுகளுக்கு கூறியிருந்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

0 Responses to பாதுகாப்பு வலயம் மீது படையினர் தாக்கினர்: விக்கிலீக்ஸ் தகவல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com