நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் இணைந்துள்ள, புதிய உறுப்பினர்களது அறிமுக நிகழ்வு ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசவையின் யாப்பினை ஏற்றுக் கொள்ளாமல், தாமாக விலகியவர்களின் இடத்தினை நிரப்பும் பொருட்டு, வாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையில் இருந்த பிரதிநிதிகளே, இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கமைய நா.த.அரசவையில் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவின் பிரகாரம் 16 புதிய மக்கள் பிரதிநிதிகளும் யாப்பை ஏற்றுள்ளனர்.
அந்தவகையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள புதிய அரசவை உறுப்பினர்களான அறிமுக அரங்கம் துணை சபாநாயகர் சுகன்யா புத்திரசிகாமணி அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.
ஜெனீவா - ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் பங்கெடுத்துள்ள அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர் (அவுஸ்றேலியா) அவர்கள், சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு கூட்டத் தொடர் குறித்து மக்களுக்கு எடுத்தியம்பினார்.
புதிய அவைப் உறுப்பினர்களது அறிமுகத்தைத் தொடர்ந்து, நாடுகடந்த தழிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறி;தான மக்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன், , தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன், கல்வி கலாச்சார சுகாதாரத்துறை துணை அமைச்சர் இராஜரட்ணம் ஜெயசந்திரன், அமைச்சரவைச் செயலர் முருகையா சுகிந்தன் மற்றும் கல்வி கலாச்சார சுகாதாரத்துறை துணை பிரான்சு செயலர் மைக்கல் கொலினஸ் ஆகியோர் நிகழ்வில் பங்கெடுத்து புதிய அரசவை உறுப்பினர்களை உற்சாகமூட்டினர்.
நாதம் ஊடகசேவை
தமிழீழ அரசாங்கத்தை வலுப்படுத்துவோம்! ஜேர்மனியில் புதிய அரசவை உறுப்பினர்கள் உறுதியெடுப்பு
பதிந்தவர்:
Anonymous
20 September 2011



0 Responses to தமிழீழ அரசாங்கத்தை வலுப்படுத்துவோம்! ஜேர்மனியில் புதிய அரசவை உறுப்பினர்கள் உறுதியெடுப்பு