இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணத் திரைப்படத்தைக் கனடியப் பாராளுமன்றத்தில் எதிர்வரும் வாரங்களிற்குள் திரையிட மனிதவுரிமை கண்காணிப்பகம் நேரடியாக முயற்சிகளை எடுத்து வருவதாகத் தெரியவருகிறது.
மனிதவுரிமை கண்காணிப்பகம் ஆரம்ப காலத்தில் விடுதலைப்புலிகளை தீவிரமாக எதிர்க்கும் ஒரு மனித அமைப்பாக செயற்பட்டு வந்தது. குறிப்பாக கனடாவில் விடுதலைப் புலிகளையும்> உலகத் தமிழர் இயக்கத்தையும் தடை செய்வதற்காக நேரடியாக அது முழு மூச்சாக ஈடுபட்டது.
மேற்படி விடுதலைப்புலிகளின் தடை தொடர்பான ஆவணத்திலும் மனித உரிமைக் கண்காணி;ப்பகத்தின் தகவல்களின் அடிப்படையிலேயே விடுதலைப்புலிகளைக் கனடாவில் தடை செய்வதாக கொன்சவேட்டிவ் அரசு அறிவித்திருந்தது.
அதே அமைப்பு சிறீலங்காவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் வகையிலான ஆவணத்தை திரையிட முன்வந்தது உண்மையிலேயே ஒரு சாதகமான மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.
மனிதவுரிமைக் கண்பாணிப்பகம் விடுதலைப்புலிகளைக் கனடாவில் தடைசெய்ய முழு மூச்சாக உதவியதற்கான காரணமாக அதன் இணைப்பாளர் திருமதி ஜோ பெக்கர் தமிழர்கள் அதிகமாக வாழும் கனடாவின் ஸ்காபரோ நகரில் வைத்த கருத்தரங்கை விடுதலைப்புலிகளின் ஆதரவு அரசியற் செய்றபாட்டாளர்கள் கூக்குரலிட்டு அது இடம்பெறாமல் குழப்பியடித்தார்கள் என்றும்
மேற்குலகிலலேயே இவ்வாறு விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் செய்தால் இவர்கள் சிறீலங்காவில் எவ்வாறு மக்களிற்கெதிரான செயற்பாட்டை மேற்கொள்வார்கள் என்ற ஒரு கருத்தை ஏற்படுத்தக் கூடியவகையில் இந்த பண்பற்ற மலினச் செயற்பாடு வழிவகுத்ததுடன், அமைப்புக்களைத் தடை செய்யவும் காரணமாயிற்று.
குறிப்பாக விவேகமற்ற செயற்பாடுகளின் மூலம் ஒரு மனிதவுரிமை அமைப்பை கோபப்படுத்தி விடுதலைப்புலிகளை தடை செய்யவதற்கு வழி செய்ததே அதற்கு உதவுவதாக தங்களை மக்களிற்கு அடையாளம் காட்டியவர்களே அமைந்தது ஈழத் தமிழர்களின் வாழ்வியலில் என்றுமே மறக்கமுடியாத மாபெரும் துன்ப நிகழ்வாகும்.
இந் நிலையில் சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் உச்சமடைந்ததையடுத்து அது தனது நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தது. குறிப்பாக யுத்தக் குற்ற விசாரணை தொடர்பான அழுத்தங்களைக் கொடுப்பதற்கு அது தன்னாலான வகையில் செயற்பட்டு வருகிறது. இந்த மாற்றம் நிச்சயமாக தமிழர்கள் குறித்த சர்வதேசப் பார்வையை மாற்றி வருகிறது.
இதன் ஒரு அங்கமாகவே பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் தயாரிப்பான கொலைக்களம் என்ற ஆவணம் எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள கேட்போர் கூடங்கள் ஒன்றில் திரையிடப்படவுள்ளது.
தமிழர்களிற்கு ஆதரவாகச் செயற்படும்> சிறீலங்காவிற்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திச் செயற்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.
இலங்கையின் கொலைக்களங்கள் கனடியப் பாராளுமன்ற வளாகத்தில் அடுத்த வாரம் திரையிட முயற்சி
பதிந்தவர்:
தம்பியன்
25 September 2011



0 Responses to இலங்கையின் கொலைக்களங்கள் கனடியப் பாராளுமன்ற வளாகத்தில் அடுத்த வாரம் திரையிட முயற்சி