Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை தமது பிரச்சினையை தாமே தீர்த்துக்கொள்ளுமானால் வெளிநாடுகளில் தலையீடு அவசியம் இல்லை என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை இந்திய பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழர் பிரச்சினையை இந்தியா வெற்றிகரமாக கையாளுமாக இருந்தால், வெளிநாட்டு தலையீடுகள் அவசியம் இல்லை என்று மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் நேற்று முன்தினம் நியூயோர்க்கில் வைத்து சந்தித்தனர்.

இதன்போது வெளிநாட்டு தலையீட்டை தடுக்க இலங்கை தமிழ்மக்களின் பிரச்சினையை உரிய வகையில் தீர்க்க வேண்டும் என்று மன்மோகன்சிங் கூறியதாக இந்திய பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற உரையின்போது இலங்கையின் பிரச்சினையை தீர்க்க வெளிநாடுகளின் தலையீடு அவசியமில்லை என்று கூறியிருந்தமைக்கு பதிலளிக்கும் முகமாகவே மன்மோகன்சிங் தமது கருத்தை கூறியதாக அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

0 Responses to உங்கள் பிரச்சினையை நீங்களே தீர்த்திருந்தால் வெளிநாடுகள் ஏன் தலையிடுகின்றன?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com