Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார்.

பொதுச் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் முகமது யூசுப், வன்னி அரசு, வெற்றிச் செல்வன், சுப வீரபாண்டியன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன்,

’’அப்பாவி தலித் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது திட்டமிட்டு நடத்திய தாக்குதலாகும்.

தமிழக அரசு அறிவித்த ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை நடத்துவது நம்பிக்கை கிடையாது. இதனால் உண்மை வெளிவராது. அதனால் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. தலித் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றால் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அரசு விழாவாக நடத்த வேண்டும்.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நஷ்டஈடு போதுமானதாக இல்லை. கூடுதலாக வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு போதுமான சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

0 Responses to தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது: திருமாவளவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com