Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்த தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் 24 ஆம் ஆண்டு மற்றும் வீர காவியமான கட்டளைத் தளபதிகளான கேணல். சங்கர், மற்றும் கேணல். ராயு ஆகியோருக்கான நினைவு வண்ணக்க கூட்டமும் நாட்டுபற்றாளர் அன்னை ஏரம்பு சின்னம்மா அவர்களின் அஞ்சலிக்கூட்டமும் கனடா ரொறொன்ரோ நகரில் அமைந்திருக்கும் கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் 24 ம் திகதி மாலை 6 - 9 மணி வரை நடைபெற்றது

திலீபன் அண்ணா தமிழர்களுக்காகவும் தனித்தமிழீழத்திற்காகவும் அன்று தன்னைத் தானே ஆகுதியாக்கி நடாத்திய தியாக வேள்வியின் நினவு தினத்தை கனடாத் தமிழ் மாணவர் சமூகமும் ஸ்காபரோ கலைபண்பாட்டுக் கழகம் இணைந்து நடாத்தினர்.

மாலை 06.00மணிக்கு கனடிய மற்றும் தமிழீழ தேசிய கொடிகள் ஏற்றபட்டு பின்னர் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு தியகதீபம் லெப். கேணல். திலீபன்,கேணல் சங்கர் மற்றும் கேணல்.ராயு மற்றும்
நாட்டுபற்றாளர் அன்னை ஏரம்பு சின்னம்மா ஆகியோரின் திருவுருவப்படங்களிற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அக வணக்கம். அதனைத் தொடர்ந்து வீர வேங்கைகளின் திருவுருவப் படத்திற்கு மலர் வணக்கம் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் மக்கள் எழுச்சியுடன் பங்கு பற்றியிருந்தினர் குறிப்பாக இளைய சமுதாயம் பெரும் பங்காற்றியிருந்தினர்

திலீபன் அண்ணாவின் மற்றும் வீரவேங்கைகளின் நினைவாக தமிழ் இளையோர் நடத்திய நாடகமும், அதனைத் தொடர்ந்து சிறப்புரைகளும் கலை நிகழ்வுகளும் உணர்ச்சி பூர்வமாக நடைபெற்றன. .

ரொறொன்ரோ வாழ் தமிழ் மக்களும், முக்கியமாக இளையோர்கள் பங்குபற்றி, திலீபன் அண்ணாவின் எடுத்துக்காட்டலின்படி, தற்போதைய சூழ்நிலையில் போராட்ட வடிவம் மாறியுள்ளதாயினும் அவர் எம்முள் மூட்டிச் சென்ற விடுதலை நெருப்பு அணையவில்லை, ஈழம் காணும் வரை ஓயோம் என உறுதி எடுத்துக்கொண்டனர்.





0 Responses to கனடா தமிழ் மாணவர் சமுகம் முன்னெடுத்த தியாக தீபம் திலீபன் அவகளின் நினைவு வணக்க நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com