சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உத்தமர் என்றால் நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஏன் ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறார் என்று திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள கலைஞர்,
மொழிப்பெயர்ப்பு சரியில்லை, சாட்சிகளை விசாரிக்க வேண்டும், வழக்கறிஞரை மாற்ற வேண்டும் என மனுக்களை போட்டு, அந்த வழக்கின் விசாரணைக் காலம் நீண்டுகொண்டே போகிறது.
அந்த ஒரு வழக்குக்காக ஆகும் செலவு எவ்வளவு? அந்த வழக்கை தாமதப்படுத்த ஜெயலலிதா எவ்வளவு முயற்சிகளை செய்கிறார். ஜெயலலிதா உத்தமராக இருந்தால் விரைவில் வழக்கை முடிப்பதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியதுதானே? சட்ட விதிமுறைப்படி ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றால், அதற்கு விதிவிலக்குக் கோரி ஜெயலலிதா மேற்கொள்ளும் முயற்சிகள்தான் எத்தனை.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறும் அனைத்தையும் கேட்க வேண்டிய அவசியம் நீதிமன்றத்துக்கு இல்லை என்றும், நீதிபதியின் பணியைத் தடுக்கக்கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சசிகலாவுக்கு கண் பிரச்சனை, சுதாகரனுக்கு எலும்புமுறிவு சிகிச்சை. இளவரசிக்கு நீரழிவு நோய் பிரச்சனை என காரணங்கள் கூறப்பட்டு காரணங்கள் கூறப்பட்டு நேரில் ஆஜராக விலக்கு கோரியதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சட்டசபை நடவடிக்கைகளில் திமுக உறுப்பினர்களை கலந்துகொள்ள விடாமல், அதிமுகவினர் மேற்கொள்ளும் நட்வடிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள கலைஞர், முதலமைச்சரே அதனை ஊக்கப்படுத்தியுள்ளார் . பொதுவாக பேரவையில் உறுப்பினராக இல்லாத ஒருவரைப்பற்றி அவையில் பேசுவது மரபல்ல.
அவையில் உறுப்பினராக இல்லாதவர்கள் பற்றி குற்றச்சாட்டு கூறும்போது, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் விளக்கம் அளிக்க அனுமதி கேட்டால் வெளியேற்றம் நடவடிக்கை மேற்கொள்வதா? என்று கலைஞர் கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உத்தமர் என்றால்... - கலைஞர் கேள்வி
பதிந்தவர்:
ஈழப்பிரியா
08 September 2011



0 Responses to சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உத்தமர் என்றால்... - கலைஞர் கேள்வி