Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தின்போது, இடம்பெற்ற மனித படுகொலைச் சம்பவங்களை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான அறிக்கையை நேற்று ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைப் பேரவை மற்றும் ஐ.நா. வின் உயர்ஸ்தானிகருக்கும் இது குறித்த அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளதாகவும், இது தொடர்பில் தான் தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது எனறும் அவர் மேலும் தெரிவத்துள்ளார்.

இக்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முழுமையாக மறுத்துள்ள நிலையில் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் விசாரணை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையின் பிரகாரம், 2009 ஆண்டு ஏப்ரல் மாதமளவில் சுமார் பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கை தொடர்பான அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பிவைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com