ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் இந்த ஆண்டுக்கான கூட்டம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நியூயோர்க் பகுதியில் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் இந்த பொதுச்சபைக் கூட்டத்தில் 130 நாடுகளின் தலைவர் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான கூட்டம் கடந்த 13 ஆம் திகதியே ஆரம்பமாகி விட்டாலும், கூட்டத்தின் மிக முக்கியமான நிகழ்ச்சிகளான உலகத் தலைவர்களின் உரைகள், பொது விவாதம் போன்றவை இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
130 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 220 வாகன அணி வகுப்புகளின் பாதுகாப்பை முன்னிட்டு, உளவுத்துறை மற்றும் வெளியுறவுத் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதுடன் நியூயோர்க் இரட்டை கோபுரத் தகர்ப்பின் 10ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் கூறியதையடுத்து, அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தலைவர்கள் தங்கும் ஹோட்டல்களிலும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில ஹோட் டல்களின் அருகில், நிரந்தர தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு, போக்கு வரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது. சில முக்கிய நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் போடப்பட்டுள்ளதுடன் தலைவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கக்பட்டுள்ளன.
இந்தாண்டு ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பல்வேறு உலக விவகாரங்கள் விவாதிக்கப்பட இருந்தாலும், பாலஸ்தீனத்துக்கு உறுப்பினர் அந்தஸ்து, மையப்புள்ளியாகும் துருக்கி, லிபியா விவகாரம், சிரியா மீது மேலும் தடைகள், தெற்கு சூடான் வன்முறை ஆகிய ஐந்து விடயங்களும் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளன.



0 Responses to ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நியூயோர்க்கில் பலத்த பாதுகாப்பு