Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் உள்ள வெற்றிவேல். 60 வயதான இவருக்கு இரண்டாவது தாரமாக 29 வயதான பால்தாய் என்பவரை மணம் முடித்து வைத்தனர். பால்தாய் வாய்பேச முடியாதவர். ஏற்கனவே இவரை திருமணம் செய்திருந்த முதல் கணவன், இவர் வாய்பேச முடியாதவர் என்பதை சுட்டிக்காட்டி தவிக்கவிட்டு சென்றுவிட்டார்.

அதன்பிறகு, வெற்றிவேலுடன் இரண்டாவது திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். வெற்றிவேல் சென்னையில் கூலி வேலை பார்த்து வந்தார். பால்தாய் உள்ளூரில் கட்டிட வேலையில் சித்தாளாக வேலை பார்த்து வந்தார்.

கணவர் எப்போதாவது தான், இவரை வந்து பார்ப்பது வழக்கம். 23.09.2011 அன்று இரவு தனது இரண்டு குழந்தைகளையும் அடுத்த தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் தங்க வைத்துவிட்டு வந்தார். இன்று காலை அவரது தாய் பிள்ளைகளுடன் பால்தாய் வீட்டுக்கு வந்தபோது, பால்தாய் அலங்கோலமாக இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தகவல் அறிந்த திருச்செந்தூர் டிஎஸ்பி ஞானசேகரன், இறந்து கிடந்த பால்தாயை பரிசோதித்த போது, அவரது கழுத்து சேலையால் நெருக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இவரது பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தமும் வடிந்து கொண்டிருந்தது. இதனால் பால்தாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை அறிந்தவர் பல கோணங்களிலும் விசாரணையை நடத்தினார்.

பால்தாய், கூலி வேலை பார்த்து வந்த பகுதியில் உள்ள மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாய்பேச முடியாத இந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நக்கீரன்

1 Response to வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை (படங்கள்)

  1. admin Says:
  2. kodumai

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com