லண்டன் லிவர்-பூல் பகுதியில் உள்ள தமிழர் கடை ஒன்றைக் கொள்ளையடித்த 13 வயதே ஆன சிறுவன் உட்பட மேலும் 4வருக்குமாக சுமார் 20 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சிறிய குழுவை அப்பகுதில் சேர்த்து துப்பாக்கியுடன் நடமாடியுள்ளார். இவர் குழுவில் தான் 11 வயதுச் சிறுவன் 15 வயது மற்றும் 18 வயது கொண்ட நபர்களும் அடங்குவார்கள்.
ஜோப் கில்ரைட் என்னும் இச் சிறுவன் 13 வயது நிரம்பியவர் என்றும் பல்வேறு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் இவர் தேடப்பட்டும் வந்தார். கடந்த மே மாதம் 11ம் திகதி இவர்கள் தமிழருக்கு சொந்தமான கடை ஒன்றினுள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். இதனைத் தடுக்க முற்பட்ட மணி மோகன் என்ற தமிழரையும் இவர்கள் கழுத்துப் பகுதியில் சுட்டுள்ளனர். ஆனால் அவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
கடைக்குள் வந்து கொள்ளையடிக்க முற்பட்ட நபர்கள் 13 தொடக்கம் 14 வயதுடையவர்களா இருக்கவேண்டும் எனச் சந்தேகித்த அவர் இவர்கள் கையில் வைத்திருப்பது விளையாட்டு துப்பாக்கியாக இருக்கலாம் என நினைத்து அவர்களை மடக்கிப் பிடிக்க நினைத்துள்ளார். ஆனால் சிறுவனோ அவரை நோக்கிச் சுட்டுள்ளான்.
லிவர் பூல் பகுதிகளில் டாக்ஸ்சி ஓடும் ஓட்டுனர்களிடம் கொள்ளைடடிப்பது மற்றும் 2007ம் ஆண்டு 11 வயதுச் சிறுவனைக் கொண்றது என்பது தொடர்பாக இக் கூட்டத்தின் தலைவரான பிராட்லி(18) என்பவர் தேடப்பட்டு வந்தார். இக் குழுவில் இணைந்தே இந்த 13 வயதுச் சிறுவனும் செயல்பட்டுள்ளான். கூட்டத்தின் தலைவரை கால வரையறையின்றி கூண்டில் அடைக்குமாறு நீதவான் உத்தரவிட்டபோது, நீதவானைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினான் பிராட்லி.
அதனைத் தொடர்ந்து இக் குழுவில் இருந்த அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. குறித்த 13வயதுச் சிறுவன் உட்பட மேலும் 4 பேருக்குமாகச் சேர்த்து 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நீதவான் தீர்ப்பாக வழங்கினார்.
2007ம் ஆண்டு இவர்களால் கொல்லப்பட்ட சிறுவனின் தாய் தாம் தற்போது நிம்மதியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது இப் பகுதியில் டாக்ஸ்சி ஓட்டுவோர் மற்றும் கடை உரிமையாளர்களும் இச் செய்திகேட்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக தமிழ் கடை உரிமையாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே" "அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்றான் கண்ணதாசன். எங்கோ வறிய நாட்டில் பிறந்த தமிழர்கள் எல்லாம் லண்டன் வந்து நன்றாக வாழ்ந்து தரமுடன் தமது பிள்ளைகளையும் வளர்த்துவரும் நிலையில், இந் நாட்டின் சொந்தக் குடிமக்கள் இந்த நாட்டில் குடிறேறியவர்களிடம் கொள்ளையடிக்கும் நிலை தோன்றியுள்ளது யாரின் குற்றம்? அவர்களை இவ்வாறு ஆக்கிய அவர்களது பெற்றோரின் குற்றமே ஆகும்.
தமிழர் கடையைக் கொள்ளையடித்த 13வயதுச் சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை! (காணொளி)
பதிந்தவர்:
Anonymous
16 October 2011



0 Responses to தமிழர் கடையைக் கொள்ளையடித்த 13வயதுச் சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை! (காணொளி)