Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மீது இன்று மதியம் ஒரு மணியளவில் இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். சினிமாப்பட பாணியில் இவர் மீது திரத்தி திரத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அருகில் இராணுவ முகாம் மற்றும் காவலரன் இருந்து இத் தாக்குதல் பட்டப்பகலில் நடந்தேறியுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவரான தவபாலன் தனது வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்திக்கு அண்மித்த பகுதியில் வைத்து இனந்தெரியாத ஆறு போ் கொண்ட குழுவினால் தாக்கப்பட்டுள்ளார்.

இராணுவ முகாமுக்கு அண்மித்த பகுதியில் மக்கள் பலரும் பார்த்துக் கெண்டிருந்த போதே இத் தாக்குதலை இனந்தெரியாதோர் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கான தவபாலன் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என அதிர்வு இணையம் அறிகிறது.

நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டது. ஜனநாயகம் பிறந்து விட்டது எனக் கூறி வரும் இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் ஒரு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் நடுவீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் வைத்துத் தாக்கப்படுவது ஜனநாயகம் பிறந்து விட்டது என்று சொல்லும் அரசாங்கத்தின் பொய் பரப்புரைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.



அதிர்வு

0 Responses to யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீது தாக்குதல் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com