Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக்களங்கள் என்ற 50 நிமிட ஆவணத்தை தயாரித்து ஒளிபரப்பியது. தற்போது தமிழர்கள் நாடு நாடாக அதனைக் காட்டி வருவதோடு பல நாடுகளில் உள்ள பாராளுமன்றங்களிலும் அதனைக் காண்பித்து வருகின்றனர்.

இதனால் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் இலங்கை பதிலுக்கு தாமும் ஒரு காணொளியை தயாரித்துள்ளது. அதனை முதல் முறையாக பிரித்தானியாவில் காட்ட அவர்கள் நேற்றைய தினம் பெருமெடுப்பிலான நடவடிக்கையில் இறங்கினர். பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் அதனை பல எம்பீக்களுக்கு முன் நிலையில் போட்டுக்காட்ட அவர்கள் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர்.

இதில் சில தமிழர்கள் கலந்துகொண்டு தமது பக்க நியாயத்தைச் சொல்ல விரும்பினார். ஆனால் இறுதி நேரத்தில் அனைத்து தமிழர்களின் பதிவுகளும் ரத்துச்செய்யப்பட்டு எம்.பீக்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம் என இலங்கைத் தூதரகம் அறிவித்தது. ஆனால் சிங்களவர்கள் மட்டும் அங்கே அனுமதிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் சாதூரியமாக 3 தமிழர்கள் உள் நுழைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தமிழ் ஊடகவியலாளர் ஆவர். இவர்கள் மூவரும் மாறி மாறி எழுப்பிய கேள்விகளால் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் அனைத்தும் தடைப்பட்டது. நடு நிலையாக இந்த காணொளியைப் பார்க்க வந்த பிரித்தானிய எம்பி மார் குழப்பிப்போனார்கள்.

இதனிடையே அந்த 3 தமிழர்களையும் பேசவிடாது சிங்களவர்கள் அடிக்கடி கூச்சலிட்டுக் குழப்பினார்கள். இதனைப் பார்த்த வேற்றின மக்கள் சிலர் அமைதியா இருக்கும்படி சிங்களவர்களைப் பார்த்து கூறவேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனை சாதகமாகப் பயன்படுத்திய தமிழர் ஒருவர் எழுந்து நின்று லண்டனில் கூட சிங்களவர்கள் ஒரு தமிழரை பேச அனுமதிக்கவில்லை, அப்படி என்றால் இலங்கையில் நிலை எவ்வாறு இருக்கும் எனக்கேள்வி எழுப்பினார். இதனால் பல சிங்களவர்கள் வாயடைத்துப்போய் மேலும் கூச்சல் போட்டால் தமக்கே மரியாதைக் குறைவு ஏற்படும் என நினைத்து அடங்கினார்கள்.

இறுதியில் சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டு அம் 3 தமிழர்களும் மண்டபத்தைவிட்டு வெளியேறினர். இந் நிகழ்வில் சனல் 4 கொலைக்களத்தின் ஆவணப்படத்தை தயாரித்த பெண்மணியும் கலந்துகொண்டு இலங்கைக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார்.

பெருமளவான பிரித்தானிய எம்பீக்கள் இந் நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்தபோதும் சுமார் 4 எம்பீகள் மட்டுமே கலந்துகொண்டனர். அதிலும் 3 எம்பீக்கள் சற்று நேரத்தின் பின் எழுந்துசென்றுவிட்டனர். அதனால் நிகழ்வும் சுமார் 1 எம்பியுடன் நடந்து முடிந்தது.

0 Responses to இலங்கை அரசு தயாரித்த மாற்றுக் காணொளியின் பரப்புரையை முறியடித்த 3 தமிழர்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com