Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று (11.10.2011) தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.என்.நேருவை ஆதரித்து முன்னாள் துணை முதல் அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்தார்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

50 ஆண்டுகள் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை 5 ஆண்டுகளில் செயல்படுத்தியவர் கலைஞர். தனது வயது, உடல் நலத்தை பற்றி கவலைப்படாமல் சிறப்பாக பணி செய்த அவரை ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்து ஜெயலலிதாவை முதல் அமைச்சர் ஆக்கினீர்கள். ஆனால் அவர் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தினாரா? ஆட்சி பொறுப்பேற்ற 5 மாதங்களில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

பொறுப்பேற்ற அடுத்த சில நிமிடங்களில் மின்சார பற்றாக்குறையை போக்குவேன் என்றார். ஆனால். ஒரு மணி, இரு மணி நேரம் இருந்து மின் வெட்டு, தற்போது 5 மணி நேரம் ஆகி விட்டது. அதேபோல் விலைவாசியை கட்டுப்படுத்துவேன் என்றார். விலைவாசியையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது.

மாற்றம் வேண்டும் என வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்து வருகிறார். அவர் செய்து வரும் ஒரே வேலை தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட்டு சிறந்த தேர்தல் பணி ஆற்றும் செயல்வீரர்களை சிறையில் தள்ளுவது தான்.

அதைப்போல தி.மு.க. வேட்பாளர் நேருவையும் தொடர்ந்து பொய் வழக்குகள் போட்டு ஜாமீன் கிடைக்கும் போது அடுத்த வழக்கில் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்திருந்தார். நீதிமன்றமே தலையிட்டு முகாந்திரம் இன்றி நேருவை கைது செய்தது தவறு என கூறி விடுதலை செய்யப்பட்டார்.

நேருவும் திருச்சியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்று அமைச்சராகி திருச்சி மாநகருக்கு பல்வேறு திட்டங்களை பெற்றுத்தந்தவர். தமிழகத்தில் 10 மாநகராட்சிகளை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. இந்த 10 நகராட்சிகளிலே அதிக நிதியை திருச்சிக்கு பெற்று தந்தவர் நேரு. இவ்வாறு அவர் பேசினார்.

0 Responses to ஜெயலலிதா ஆட்சியில் மின்வெட்டு 5 மணி நேரம் ஆகி விட்டது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com