தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்களும் மற்றும் மாவை சேனாதிராசா அவர்களும் ஜேர்மனி சென்று அங்கே சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. பிரித்தானியாவில் இயங்கிவரும் 3 எழுத்துக் கொண்ட தமிழ் அமைப்பு ஒன்றுடன் பூட்டிய அறையில் இச் சந்திப்பு நிகழ்ந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னர் திரு.சுமந்திரன் அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் நோர்வே சென்று அங்கே அமைச்சர் எரிக் சொல்ஹைம்மை சந்தித்தும் உள்ளார்.
மகிந்தர் நியமித்த ஆணைக்குழு தனது அறிக்கையை டிசம்பர் மாதம் வெளியிட உள்ள நிலையில் ஒரு தீர்வுத் திட்டத்தையும் இலங்கை அரசு முன்வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தாம் ஏற்றுக்கொள்ள இருப்பதாக சுமந்திரன் சில தமிழர்களிடம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். காணி அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரம் அற்ற ஒரு மாவட்ட சுயாட்சி போன்றதொரு அதிகாரத்தை தமிழர்களுக்கு வழங்கி அந்த தீர்வுத் திட்டத்தின் மூலம் இலங்கையில் இனப்பிரச்சனை இனி இல்லை எல்லாம் தீர்ந்துவிட்டது என மகிந்த அரசு உலகிற்கு காட்ட முற்படுகிறார்.
இதனை சுமந்திரன் ஏன் ஏற்றுகொள்ளவேண்டும்? இதுவே இங்கே கேள்விக்குறியாக உள்ளது. 33,000 போராளிகள் தமிழீழக் கனவுகளோடு தம்மை ஆகுதியாக்கினார்கள். சரி தமிழீழம் தான் தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்றால் அதனை விட சற்று அதிகாரம் குறைந்த அலகு ஒன்றை இவர்கள் கோரலாமே.
அதனை விடுத்து மகிந்தரால் கொடுக்கப்படும் குறைந்த அளவுகொண்ட அதிகாரத்தை ஏன் பெறவேண்டும்? இதன் மூலமாக தமிழர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? சிங்கள தேசம் இனி இலங்கையில் இனப் பிரச்சனையே இல்லை என்ற பரப்புரைகளை மேற்கொள்ள ஆரம்பிக்கும்.
எனவே மகிந்தரால் வழங்கப்படவிருக்கும் தீர்வுத் திட்ட பொதியை நன்கு ஆராய்வது நல்லது. என்ன அதிகாரங்கள் அதற்கு இருக்கிறது என்பது போன்றவிடையங்கள் ஆரயப்படவேண்டும். இல்லையேல் நாம் இன்னும் 30 வருடங்கள் பின்நோக்கியே நகர்த்தப்படுவோம் என்பதே உண்மையாகும்.



0 Responses to சுமந்திரன் ஜேர்மனியில் நடத்திய இரகசியக் கூட்டம்: நடந்தது என்ன?