Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இரண்டு கட்சிகளும் (அ.தி.மு.க., – தி.மு.க.,) கொள்ளையடிக்கும் கட்சிகள். நான் இருந்தால் கொள்ளையடிக்க முடியாது என்பதால் கழற்றி விட்டனர்,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் காட்டமாக கூறினார்.

மதுரை மேயர் வேட்பாளர் கவியரசு, கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. அடிப்படை வசதிகள் துளியும் இல்லை. எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் தவறு செய்ய மாட்டார்கள். நேற்று நான் ஒரு எம்.எல்.ஏ., இன்று 29. நாளை நீங்களே முடிவு செய்யுங்கள். உங்களுக்கு யார் நன்மை செய்வார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள். நான் நிரந்தரமாக முதல்வராக விரும்பவில்லை. ஒரே ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள். உங்களுக்கு சேவை செய்வேன். கட்சி துவங்கிய ஏழாண்டில் ஆளும் கட்சியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ச்சி பெற்று எங்கள் கட்சி விளங்குகிறது. பிரசாரத்தில் சொல்வதை நம்பி ஏமாந்து விடாதீர்கள். விலை போகாதீர்கள்.

மதுரையில் தே.மு.தி.க.,வின் இரண்டு எம்.எல்.ஏ.,க்களை தேர்வு செய்தீர்கள். அவர்களும், கவுன்சிலர்களும் உங்களை தேடி வருகின்றனர். இவர்களை போல் மற்ற கவுன்சிலர்கள் மக்களை தேடி சென்றதுண்டா. இரண்டு கட்சிகளும் (அ.தி.மு.க., – தி.மு.க.,) கொள்ளையடிக்கும் கட்சிகள். நான் இருந்தால் கொள்ளையடிக்க முடியாது என்பதால் கழற்றி விட்டனர் என்றார்.

விஜயகாந்த் “டென்ஷன்’ : வாடிப்பட்டியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, “”கடந்த ஐந்தாண்டு பதவியில் இருந்தவர்கள், ஊழல் செய்து கொள்ளையடித்தனர்” என்றார். கூட்டத்தில் இருந்த “குடி’மகன் ஒருவர், “”நீங்கள் பதவிக்கு வந்தா… லஞ்சம் வாங்க மாட்டீங்களா?” என்றார்.

“டென்ஷன்’ அடைந்த விஜயகாந்த், “”ஏற்கனவே, அவங்க அஞ்சு வருஷம் லஞ்சம் வாங்கி சேர்த்து வைத்ததைக் கொண்டு வந்து கொடுக்கச் சொல். அதுக்குப் பிறகு, நாங்க வாங்குவோமா, மாட்டோமான்னு சொல்றோம்” என்றார்.

0 Responses to கொள்ளையடிக்கும் கட்சிகள்’: விஜயகாந்த் காட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com