Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூடங்குளம் போராட்டக் குழுவினருக்குத் துணையாக தமிழகம் திரண்டெழ வேண்டும்! - பழ. நெடுமாறன் வேண்டுகோள்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர்

பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் குறிப்பிட்டபடி நிறைவேற்றப்படும் என பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.

பிரதமரின் இந்தப் போக்கு மக்களின் உணர்வுகளையும் தமிழக அரசின் வேண்டுகோளையும் மதிக்காதப் போக்காகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத் தூதுக்குழுவினர் பிரதமரைச் சந்தித்தபோது அணுமின் நிலைய திட்டம் குறித்து நிபுணர்குழு ஒன்றை அமைப்பதாக பிரதமர் அளித்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

மக்களின் அச்சம் போக்கப்படும் வரை திட்ட வேலைகள் நிறுத்தி வைக்குமாறு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தையும் பிரதமர் அலட்சியம் செய்திருக்கிறார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 925 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும் என்றும் இத்திட்டத்தை கைவிட்டால் தமிழகத்தின் வளர்ச்சி மட்டுமன்றி தொழில்மயமாக்கத் திட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் பிரதமர் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒகேனக்கல் புனல் மின் திட்டம் அமைக்க கடந்த 50 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழக அரசுக்கு அனுமதி தர மத்திய அரசு மறுத்து வருகிறது. கர்நாடகத்தின் எதிர்ப்பே இதற்குக் காரணமாகக் காட்டுகிறது. தமிழக அமைச்சரவை நிறைவேற்றியத் தீர்மானத்தை மதித்து நடக்கும்படி பிரதமரை முதலமைச்சர் வற்புறுத்த வேண்டும்.

அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளுக்கு செல்வோரை அறவழியில் தடுக்க போராட்டக் குழுவினருக்கு சட்டப்படி உரிமை உண்டு. இதில் காவல்துறை தலையிடாமல் இருந்தாலே போதும் வேலைகள் தானாக நின்றுவிடும்.

பிற தென்மாநிலங்கள் அணுமின் நிலையத்தை தங்கள் மாநிலத்தில் அமைப்பதற்கு மறுத்துவிட்ட நிலையில் தமிழகத்தில் அதை அமைத்து உற்பத்தியாகும் மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு பங்கிட்டுக்கொடுக்க மத்திய அரசு வகுத்துள்ளத் திட்டம் தமிழர்களை ஏமாளிகளாக்கும் திட்டமாகும்.

மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு அபாயம் நேருமானால் அது தமிழ்நாட்டுக்கு என்ற நிலையை எதிர்த்து தமிழக மக்கள் அணி திரண்டு போராடவும் கூடங்குளம் மக்களுக்கு தோள்கொடுத்து துணை நிற்கவும் முன்வரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

பழ.நெடுமாறன்
(அமைப்பாளர்)

1 Response to கூடங்குளம் - தமிழகம் திரண்டெழ வேண்டும்: பழ. நெடுமாறன்

  1. Antony Says:
  2. இந்தியாவில் இன்னும் பார்பனர்களின் அதிகாரம் அதிகம்.எனவே அவர்கள் இதை வரவேற்க மாட்டார்கள்.ஏன் ஜெயலலிதாவே மாறுவார்.உள்ளாட்சி தேர்தலுக்காக அவர் மவ்னம் சாதிக்கிறார்.அதன் பிறகு அவரே அணு மின் நிலைய பணிகளுக்கு அதரவு தருவார்.தமிழன் எப்போதுமே நாதியற்றவன்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com