Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ,

சமச்சீர் கல்வி, ஸ்டெர்லைட் ஆலை மற்றும் பரமக்குடி துப்பாக்கிச் சூடு போன்றவைகளில் அதிமுக அரசு மக்கள் விரோத நடவவடிக்கைகளில் ஈடுபட்டது. நீதிபதி இக்பால் தலைமையில், புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். சமச்சீர் கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்று கொடுக்கப்பட்ட தீர்ப்பை தூக்கி எரிந்துவிட்டு உச்சநீதிமன்றத்துக்கு போனீர்கள். பாதிக்கப்பட்டது பெற்றோர்கள் அலலவா. தங்கள் பிள்ளைகளின் படிப்பை பற்றி கவலைப்பட்ட தாய் தந்தையர்கள் அல்லவா. இந்த அணுகுமுறை ஜனநாயகத்திற்கு ஏற்றது அல்ல.

அதே அணுகுமுறைதான் பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தச் சொன்னது. மாற்றம் வரும் என்று எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு அதிமுக அரசு ஏமாற்றத்தை அளித்து வருகிறது என்றார்.

0 Responses to அதிமுக அரசு மக்கள் விரோத நடவவடிக்கைகளில் ஈடுபட்டது: வைகோ பேச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com