Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சொத்து குவிப்பு வ்ழக்கில் பெங்களூர் கோர்ட்டில் நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

1991 -96ல் முதல்வராக இருந்த போது ஜெயலலிதா 66 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டில் நியாயம் கிடைக்காது என பெங்களூரு கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

பெங்களூரில் நீதிபதி மல்லிகார்ஜூனையா முன்னிலையில் விசாரணை நடந்துவந்தது. 13 ஆண்டாக நடந்து வரும் விசாரணையில் ஒரு முறை கூட ஜெயலலிதா நேரில் ஆஜரானது இல்லை.

ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வாதம் செய்தார். அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் கோர்ட் உத்தரவிட்டது.

பாதுகாப்பை காரணம் காட்டி பெங்களூர் நிதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து 2 வாரம் விலக்கு கோரியிருந்தார் ஜெயலலிதா.

நீதிமன்றத்தில் ஆஜராவதை தள்ளிவைக்க ஜெயலலிதா விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று கர்நாடக டிஜிபி உறுதியளித்துள்ளார்.

மேலும், கர்நாடக தலைமைச்செயலர், டிஜிபி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளனர். தலைமைச்செயலர், டிஜிபி பதிலை அடுத்து ஜெயலலிதா நாளை கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. பாதுகாப்பு காரணத்தை காட்டி ஒத்திவைக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

சிறப்பு கோர்ட் செயல்படவுள்ள பெங்களூரு அக்ரஹாரத்தில் கூடுதல் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது என்றூ டிஜிபி தெரிவித்துள்ளார். அவர் மேலும், ஜெயலலிதா பாதுகாப்புக்கு என தனி போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜெயலலிதா நாளை பெங்களூர் கோர்ட்டில் ஆஜராகவேண்டும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com