லெப்ரினன்ட் கேணல் குமரப்பா, லெப்ரின்னட் கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகள், லெப்ரின்னட் கேணல் விக்ரர், 2ஆம் லெப்ரின்னட் மாலதி மற்றும் இம்மாதம் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு லண்டனில் நடைபெற்றது.
தென்மேற்கு லண்டன் மேர்ட்டன் அரங்கில் நேற்று (16-10-2011) மாலை இடம்பெற்ற நிகழ்வில் திருமதி சுபா பொதுச்சுடரை ஏற்றி வீரவணக்க நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அக வணக்கம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, பொதுமக்கள் மலர் வணக்கத்தில் ஈடுபட்டனர்.
வீரவணக்க நிகழ்வில் விடுதலைப் பாடல்கள் இசைக்கப்பட்டதுடன், சிறப்புரைகளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியும், தமிழ் மாணவர் பேரவையை ஆரம்பித்தவருமான பொன்.சத்தியசீலன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்தமிழீழ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர். நிறைவாக பாவலர் வல்வைத்தேவனின் கவிதையுடன் ‘தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற தாரய தாயக முழக்கத்துடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
இங்கு உரையாற்றிய பொன்.சத்தியசீலனும், எஸ்.ஜெயானந்தமூர்த்தியும் லெப்ரின்னட் கேணல்கள் குமரப்பா, புலேந்திரன், விகரர் பற்றியும் ஏனைய மாவீரர்கள் தொடர்பாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் வழி நடத்தலில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிப் படிநிலைகள் பற்றி தமது உரையில் குறிப்பிட்ட அதேவேளை, சமகால அரசியல் நிலவரங்களையும் எடுத்து விளக்கினர்.
குறிப்பாக லண்டனில் மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவது பற்றி தற்பொழுது எழுந்துள்ள குழப்பங்கள் பற்றிப் பேசிய இவர்கள் இருவரும், தமிழீழத் தேசியத் தலைவரினால் உருவாக்கப்பட்டு, வழி நடத்தப்பட்ட அனைத்துலகக் கட்டமைப்பே வழமைபோன்று மாவீரர் நாளை நடத்த வேண்டும் எனவும், விடுதலைப் போராட்டத்தையும், மாவீரர்களை நினைவேந்தும் புனித நிகழ்வையும் சிதைக்கும் செயற்பாட்டில் யாரும் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.








0 Responses to லண்டனில் நடைபெற்ற குமரப்பா, புலேந்திரன் வீரவணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)