கடந்த 2 மாதங்களாக கொழும்பு 4ம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வாசுகி கருணாநிதி விடுதலையாகியுள்ளார்.
பிரித்தானியப் பிரஜையான திருமதி வாசுகி கடந்த 2மாதங்களுக்கு முன்னர் தனது மகளுடன் இலங்கை சென்றபோது புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு 4ம் மாடிக்கு கொண்டுசெல்லப்பட்டார். காரணங்கள் எதுவும் இன்றி அவர் தொடர்ந்து 60 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இதேவேளை பிரித்தானியத் துணைத் தூதுவரும் மற்றும் லண்டனில் இருக்கும் நேர்மையான விசாரணைக்கான அமைப்பு இவ்விடையத்தில் தலையிட்டிருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும். அத்தோடு அவர் கைது தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.
இவ்வழக்கை எதிர்கொள்ள முடியாத இலங்கை அரசானது அவரை விடுதலைசெய்துள்ளது. நேற்று முன் தினம் அவரை இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விடுதலை செய்தனர். அவர் நேற்று(புதன்கிழமை) பிரித்தானியா வந்தடைந்தார் என அதிர்வு இணையம் அறிகிறது.
இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் இவரை ஏன் கைதுசெய்தனர் பின்னர் குற்றங்கள் எதுவும் சுமத்தப்படாத நிலையில் அவரை விடுதலைசெய்துள்ளனர். ஆள் மாறாட்டம் காரணமாக இவர் கைதாகி இருக்கலாம் என்ற செய்திகளும் தற்போது கசிந்துள்ளது.



0 Responses to இரகசியமாகக் கைதான திருமதி வாசுகி விடுதலை: லண்டன் திரும்பினார்!