Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இரு சமூகத்தினரிடையே பகைமையைத் தூண்டியதாக தனக்கு எதிராகப் போடப்பட்டுள்ள வழக்கை தில்லி போலீசார் வாபஸ் பெற வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என்றார் அவர்.

தில்லி போலீசார் பதிவுசெய்துள்ள வழக்கு முட்டாள்தனமானது எனத் தெரிவித்த சுவாமி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தன்னுடைய புலனாய்வில் ஏற்பட்ட அச்சத்தால் இந்த புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றார்.

சுவாமி இந்த ஆண்டு ஜூலை மாதம் பத்திரிகையொன்றில் எழுதிய கட்டுரையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் உள்ள இந்துக்கள் எப்படி பதிலளிக்க வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தியிருந்தார்.

இது இரு சமூகத்தினரிடையே பகைமையைத் தூண்டுவதாக உள்ளது என்று கூறி தில்லி போலீசார் இந்திய தண்டனைச் சட்டத்தின் 153ஏ பிரிவின்கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

பிரதமர் தலையிட்டு இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு தில்லி போலீசாரை கேட்டுக்கொள்ள வேண்டும் என்று சுவாமி கோரிக்கை விடுத்தார்.

0 Responses to எனக்கு எதிரான வழக்கு முட்டாள்தனமானது சுவாமி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com