இஸ்ரேலுடன் தொடர்புடைய நிதியாளர்கள் மற்றும் தனியார் புலனாய்வு நிறுவனம் என்பனவே பிரித்தானிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸின் நண்பர் எடெம் வெரிட்டிக்கான பயண செலவுகளை வழங்கி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெரிட்டியால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினால், லியாம் பொக்ஸ் உடன் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்வதற்கு 157 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் செலவழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெரிட்டியின் தனியார் பாதுகாப்பு நிறுவனம், இலங்கை மற்றும் இஸ்ரேலின் சொத்து முதலீட்டாளர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லியாம் பொக்ஸ் உத்தியோகபூர்வமாகவோ, உத்தியோகபற்றற்ற ரீதியிலோ அவரது நண்பரை எந்தப் பதவியிலும் நியமிக்கவில்லை. எனினும் நண்பரான வெரிட்டி தமது சொந்த தொடர்பு அட்டையில் லியாம் பொக்ஸின் ஆலோசகர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் லியாம் பொக்ஸ் உடன் சுமார் 18 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் கடந்த வருடம் லியாம் பொக்ஸ்சும் அவரது நண்பரும் லண்டன் மன்டாரியன் ஒரியன்டல் ஹோட்டலில் இடம்பெற்ற நிதிச் சேகரிப்பு இரவு போசன நிகழ்வு ஒன்றில் அதிதிகளாக பங்கேற்றதாக டெய்லி டெலிகிராப் தெரிவித்துள்ளது.
லியாம் பொக்ஸின் நண்பர் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தமை அம்பலம் (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
தம்பியன்
15 October 2011



0 Responses to லியாம் பொக்ஸின் நண்பர் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தமை அம்பலம் (காணொளி இணைப்பு)