Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முதுபெரும் எழுத்தாளர் தி.க.சி. பேசுவதற்கு உதவியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மை பிடித்து உதவினார். இதனை பார்த்த பொதுமக்கள் பரவசம் அடைந்தனர்.

நெல்லை மாநகராட்சி பகுதியில் மதிமுக மேயர் வேட்பாளர் மகேஷ்வரி நடராஜன், 53வது வார்டு வேட்பாளர் ஆட்டோ பாலு ஆகியோரை ஆதரித்து நெல்லை டவுண் திருபுரசுந்தரி கோவில் முன்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார்.

உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய மதிமுகவிற்கு வாக்களியுங்கள் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும் அவர் பேசுகையில், தவறுக்கு இடம் அளிக்காத வகையில் நேர்மையான நிர்வாகத்துடன் மதிமுக வேட்பாளர் மாநகராட்சியை வழிநடத்தி செல்வார்.

18 ஆண்டுகாலமாக மக்களுக்காக மதிமுக உழைத்து வருகிறது. மாநகராட்சி மேயராக மதிமுக வேட்பாளர் மகேஷ்வரி நடராஜன் பொறுப்பு ஏற்கும் நிலையில் அவரது தலைமையில் நிர்வாக ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்படும்.

இதில் மதிமுக உறுப்பினர்கள் எவரும் அங்கம் வகிக்க மாட்டார்கள். மாற்றாக அரிமா சங்கம், ரோட்டரி கிளப், வர்த்தக கழகம்,என் ஜிஓக்கள், மற்றும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்பார்கள்.

இதன் மூலம் மாநகராட்சி தன்னிறைவு பெறும். எனவே மதிமுகவிற்கு ஆதரவு தாருங்கள் என்றார்.

வைகோ பேசி முடித்த நிலையில் முதுபெரும் எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற வருமான நெல்லை எழுத்தாளர் தி.க.சி. பிரச்சார பகுதிக்கு வந்தார்.

அவர் மக்களிடம் பேச வேண்டும் என் ஆர்வம் தெரிவித்த நிலையில், பிரச்சார வாகனத்தில் இருந்த மைக்கை எடுத்து அவர் பேசுவதற்கு ஏதுவாக மைக்கை வைகோ பிடித்துக்கொண்டார்.

மதிமுக பொதுச்செயாளர் வைகோவின் சார்பில் போட்டியிடுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட எழுத்தாளர், கருப்பாயி என்ற நூர்ஜகான் என்றபுத்தகத்தை வைக்கோவிற்கு பரிசாக வழங்கினார்.

0 Responses to முதுபெரும் எழுத்தாளருக்கு மைக் பிடித்த வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com