Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக கலாநிதி- தயாநிதி மாறன் சகோதரர்களின் வீடுகளில் சிபிஐ நடத்திய சோதனை ஒரு கண்துடைப்பு நாடகம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், இந்த சோதனைகளின் மூலம் பல்வேறு விவகாரங்கள் வெளியில் வரும் என்று நம்பினோம். ஆனால் மக்களை ஏமாற்றும் செயலாகவே இந்த சோதனை தெரிகிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து பத்திரிக்கைகள், டிவியில் செய்திகள் வெளியாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சோதனைகள் நடைபெற்றுள்ளன. இந்த 4 ஆண்டுகளில் பல அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.

ஆனால், 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகும் மாறன் சகோதரர்கள் இது தொடர்பான ஆவணங்களை அவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வைத்திருப்பார்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எனவே இந்த சோதனைகள் மூலம் ஏதாவது வெளியே வருகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

0 Responses to சிபிஐ நடத்திய சோதனை ஒரு "நாடகம்": முதல்வர் ஜெயலலிதா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com