கடந்த தீபாவளி தினத்தை கனடாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் கொண்டாடியதாக செய்திகள் வெளியாகியிருந்தது யாவரும் அறிந்ததே. இன்னும் சில நாடுகளில் அவை நடைபெற்றதும் அதற்கான புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.
ஆனால் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தீபாவளி நிகழ்வுகள் எதனையும் செய்யவில்லை என்ற செய்திகள் கொழும்பு ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதனை சில தமிழ் இணையங்களும் பிரதிபலித்தன. தமிழர்கள் செறிந்து வாழும் லண்டனில் அவ்வாறு ஒரு நிகழ்வை இலங்கை அரசால் வெளிப்படையாகச் செய்ய முடியாது என்ற கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இலங்கைத் தூதரகமானது பிற இடங்களில் மண்டபத்தை எடுத்து தீபாவளி நிகழ்வை நடத்தியது போல இல்லாமல், லண்டனில் அது தனது தூதுவராலயத்துக்குள் நிகழ்வுகளை நடத்தியுள்ளது. இதற்குச் சில தமிழர்களும் குருக்கள் ஒருவரும் சென்றுள்ளனர். இலங்கை அரசின் அபிமானியும் அடிவருடியுமான திருமதி ராஜேஸ்வரியும் கலந்துகொண்டுள்ளார்.
இப் புகைப்படங்களில் உள்ள தமிழர்களை இனங்காணவேண்டும்.





அதிர்வு



part time but full time income video mail to go soon
www.tourtalkfusion.com/1279531
சிங்களவனுக்கும் தீபாவளிக்கும் எந்தச்சம்பந்தமும் இல்லை, சிங்களவர்களின் மதக்கலாச்சாரத்தில்
தீபாவளிக் கொண்டாட்டம் என்பதே இல்லை. இருந்தும் சிங்கள அரசு இப்போது தீபாவளியையும்
சிங்களவர்களின் சமயக்கொண்டாட்டங்களில் ஒன்றாக சேர்த்து இருக்கிறது என்று நம்பவேண்டியுள்ளது.
கொடுமைக்காரனான நரகாசுரன் அழிக்கப்பட்ட தினத்தை தீபம் ஏற்றி மகிழ்சியாகக் கொண்டாடுவது
இந்து சமய மரபு. சிங்கள நரகாசுரர்களிடமிருந்து தமிழினத்தையும் , தமிழ் மண்ணையும் மீட்பதற்காகப்
போராடிய போராளிகளை அழித்தொழித்தது சிங்கள வரலாற்றில் மிக மிக மகிழ்ச்சிக்குரிய நிகழ்வு.
சிங்களவர்களைப் பொறுத்தவரை பிரபாகரன் ஒரு நரகாசுரன் , பிரபாகரனை மகிந்த ராஜபக்ச சங்காரம்
செய்துவிட்டான் என்பதே இன்று சிங்களவர்கள் கொண்டாடும் தீபாவளி. சிங்கள பௌத்தர்களுக்கு பிரபாகரன்
கொல்லப்பட்ட செய்தி ஒரு புதிய தீபாவளி.
கேவலம் என்னவென்றால் தீபாவளி என்ற பெயரில் விடுதலைப் போராளிகளையும்
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களையும் கொன்று குவித்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் சிங்களத்
தூதுவர்களோடு சேர்ந்து தமிழர்களும் தமிழின அழிப்பை மகிழ்ந்து கொண்டாடுவதுதான்.
இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் தமிழர்களுக்கு சிங்களவன் சொல்லாமல் சொல்லும் செய்தி
"தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா" என்பதே.
சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ...