பெல்ஜியத்தில் 30-11-2011 அன்றுதேசிய நினைவெழுச்சி நாள் வெகுசிறப்பாக நடைபெற்றது.பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வுகள் தேசியக்கொடியேற்றல் பின் மாவீரர் திருவுருவப்படத்துக்கு ஈகைச்சுடரேற்றல்இ அகவணக்கம் மலர்வணக்கம் செலுத்தி கண்ணீர் மல்க மாவீரர் குடும்பங்கள் தமது மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தினர்.
பின் எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் சிறப்புரை என்பன இடம்பெற்றன. மண்ணின் விடிவிற்காய் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி மண்டபம்நிறைந்த தமிழ் உறவுகள் இம்மாவீரர் நிகழ்விலே கலந்து தங்கள் வணக்கத்தைச் செலுத்தி மன நிறைவுடன் அமைதியாக நிகழ்வுகளில் பங்கேற்றனர்.அதனை தொடர்ந்து மாவீரர் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
பெல்ஜியத்தின் இடதுசாரி கட்சியின் முக்கிய உறுப்பினர் உணர்வுகரமாக பெல்ஜியம் நாட்டு மொழியில் உரையாற்ற தமிழ் மக்கள் அனைவரும் பெறும் மகிழ்ச்சி அடைந்தனர்.பெல்ஜியம் நாட்டு இளையோர் அமைப்பு அரங்கேற்றிய முள்ளியவாய்க்கள் முடிவா இல்லை தமிழ் ஈழம் தான் முடிவு என்னும் நாடகம் தமிழ் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்ப்பையும் பெற்றதோடு தமிழ் உணர்வை துண்டியதொடு நீங்காத இடமும் பிடித்தது.
அந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து யேர்மனி நாட்டு இசைக்குழுவுடன் சேர்ந்து பெல்ஜியம் நாட்டு இசைக்குழுவும் இணைந்து எழுச்சி கானங்கள் இசைக்கப்பட்டது.தமிழ் ஈழ கணவை அடையும் வரை நங்கள் தொடர்ந்து போரடுவம் என்ற உறுதி மொழியுடன் இசைக்குழு நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும் என்னும் உணர்வு மிக்க பாடலை பாடி தனது நிகழ்வை நிறைவு செய்யப்பட்டது.
பெல்ஜியத்தில் மிக உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் 2011 (படங்கள்)
பதிந்தவர்:
தம்பியன்
01 December 2011



0 Responses to பெல்ஜியத்தில் மிக உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் 2011 (படங்கள்)