Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லை பெரியாறு விவகாரத்திற்கு திமுக தலைவர் கருணாநிதியே காரணம் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது : முல்லை பெரியாறு அணை விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதியே காரணம்.

முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக 1998ம் ஆண்டு நாள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தேன்; அந்த வழக்கில் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அணையின் நீர் தேக்கும் உயரத்தை 124 அடியாக உயர்த்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது; இதனை எதிர்த்து இதுவரை யாரும் தடை வாங்கவில்லை; அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதியும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது அணை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதுவது வேடிக்கையாக உள்ளது; இதே போன்று கூடங்குளம் அணுமின் நிலையம் வர கூடாது என சிலர் பிரச்னை செய்து வருகின்றனர். முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; தமிழக, கேரள மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது. சிறையிலிருந்து திரும்பிய கனிமொழிக்கு திமுக அளித்த வரவேற்பு தேவையற்றது; அவரது ஜாமீன் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம்; 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா எந்த அளவிற்கு குற்றம் செய்துள்ளாரோ அதே அளவிற்கு உள்துறை அமைச்சர் சிதம்பரமும் குற்றம் செய்துள்ளார். இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

0 Responses to கருணாநிதி மீது சுப்பிரமணியசாமி குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com