Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தைப்பொங்கல் கொண்டாட்ட நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வேறு கலந்துகொண்டு இருந்தார். இந் நிகழ்வுகள் சம்பிரதாய பூர்வமாக நடப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அலரிமாளிகைக்கு ஒரு பசு மாட்டை வேறு அழைத்துவர ஏற்பாட்டாளர்கள் விரும்பியுள்ளனராம். இதனை மகிந்தரின் பாதுகாப்பு பிரிவினர் தடுக்க முற்பட்டவேளை வெறும் பசு மாடு அதுவும் கொம்பு இல்லாத சிறிய பசு மாடு ஒன்றையே தாம் கொண்டுவர உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே போல படு கஷ்டப்பட்டு ஒரு சாதுவான மற்றும் கொம்பு அதிகம் இல்லாத பசு மாடு ஒன்றைத் தேடிப்பிடித்து பூஜைக்காக அவர்கள் அலரி மாளிகைக்கு கொண்டு வந்துள்ளனர். பொங்கல் பூஜை ஆரம்பமான வேளை மகிந்தருக்கு முன்னால் நின்ற பசு மாட்டிற்கு அங்கே நின்ற ஐயர் ஒருவர் குங்குமம் வைத்துள்ளார். அந்தப் பசுவை மகிந்தர் தொட்டுக் கும்பிட அருகில் சென்றுள்ளார் ஆனால் அவ்வளவு நேரமும் மிகச் சாதுவாக நின்ற பசு மகிந்தர் கிட்ட நெருங்கியவேளை திமிற ஆரம்பித்து விட்டது. கிட்டப் போய் பசுவைத் தொடாவிட்டால் தான் பயத்தில் தான் அதனைத் தொடவில்லை என்று அருகில் நிற்கும் கிருஷ்னா தொடக்கம் அனைவரும் நினைத்துவிடுவார்களே என்ற ஏக்கம் ஒருபக்கம். ஆனால் மாடு முட்டி விடுமோ என்று ஒரு பயம் மறு புறமாக திண்டாடியுள்ளார் மகிந்தர்.

ஒரு வழியாக மாட்டின் கொம்புகளில் சுற்றப்பட்டுள்ள கயிற்றை ஒருவர் இறுக்கிப் பிடிக்க மாட்டை ஒரு முறை தொட்டுவிட்டுச் சென்றுள்ளார் மகிந்தர். அது சரி அவ்வளவு நேரமும் சாதுவாக நின்ற மாடு மகிந்தரைப் பார்த்ததும் ஏன் குழம்பியது என்ற கேள்விகள் எழலாம். அட இது கூடவா தெரியாது.. அவரை கோமாதாவுக்கு பிடிக்கவில்லை அவ்வளவு தான். ஆனால் அருகில் நின்றவர்கள் நீங்கள் சிவப்பு சால்வை போட்டு இருக்கிறீர்கள் அதனால் தான் மாடு மிரண்டு விட்டது என அசடு வழிந்துள்ளார்கள்.

1 Response to பொங்கலுக்காக வந்த மாடு பொங்கி எழுந்தது: அலறிய மகிந்தர்!

  1. பசு சைவ உணவு உண்ணும் மிருகம்; மகி ந்த ராஜபக்சே ஒரு பிணத்தின்னி மிருகம்; பசு மிரலாமல் என்ன செய்யும்?

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com