Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை விவகாரத்தில் மற்றயை நாடுகள் அனைத்திற்கும் முன்மாதிரியாக நடந்த கனடியப் பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சருக்கும் கனடியத் தமிழர்கள் சார்பிலான நன்றியறிதலை இந்த வார ஆரம்பத்தில் இடம்பெற்ற பொங்கல்விழாவில் வைத்துத் கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் உமாசுதன் தெரிவித்தார்.

மேற்படி விழாவில் கலந்து கொண்ட கண்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர்களின் மூலமாகவும் இச் செய்தி நேரடியாகவே கனடியத் தமிழ்க் காங்கிரஸால் தெரிவிக்கப்பட்டதோடு இவ் உறவைப் பலப்படுத்துமுகமான அமைச்சரவை சகாக்களுடனான சந்திப்புக்கான அழைப்பை தமிழ்க்காங்கிரஸ் கடித மூலம் விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

கனடியப் பிரதமரின் தலைமைத்துவப் பண்பை வெளிப்படுத்திய சிறீலங்கா மீதான கண்டன நடவடிக்கையைச் சுட்டிக் காட்டியே கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் இந்த நன்றியறிதலைத் தெரிவித்திருந்ததோடு தாங்கள் கனடியர்கள், தமிழர்கள் சம்பந்தமான விவகாரங்களில் தொடர்ந்தும் அரசியற் கட்சிகளுடனும் தலைவர்களுடன் சேர்ந்து இயங்கும் என்றும் தெரிவித்தார்.

அத்தோடு கனடியத் தமிழர்களிற்குத் தேவையான கலாச்சார – சமூக மண்டபமொன்றை அமைப்பதையே 2012ம் ஆண்டிற்கான திட்டமாக எடுத்துள்ளதாகவும், ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு நியாயங் கிடைப்பதற்கு தொடர்ந்தும் பாடுபடும் என்றும் தெரிவித்தார்.

0 Responses to கனடியப் பிரதமருக்கு கனடியத் தமிழர்கள் சார்பில் உளமார்ந்த நன்றிகள் - கனடியத் தமிழ்க் காங்கிரஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com