Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிக்காமை தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதற்கு தடையாக அமைந்துள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு இன்னமும் எதிர்க்கட்சிகள் பிரதிநிதிகளை நியமிக்கவில்லை.

பிரதிநிதிகளை நியமிக்கும் வரையில் தீர்வுத் திட்டங்களை முன்வைக்க முடியாது. ஆளும், எதிர்க்கட்சிகளுக்கான உறுப்பினர் எண்ணிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே நிர்ணயித்துள்ளது என ஆளும் கட்சியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட்ட கட்சிகள் இன்னும் தமது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. இந்தநிலையில் 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தெரிவுக்குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிக்கும் வரை தீர்வுத் திட்டங்களை முன் வைக்கமுடியாது– அரசாங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com