அனைத்து ஊடக நண்பர்களுக்கும் கனடியத் தமிழர் தேசிய அவையின் அன்பான வேண்டுகோள்!
பல அமைப்புக்களும், பேரறிஞர்களும், வழக்கறிஞர்களும், இணைந்து வருகின்ற பெப்ரவரி மாதம் 18ம், 19ம்; நாட்களில் மாபெரும் தமிழ் மாநாடு கனடாவில் நடைபெறவுள்ளது.
இம் மாநாடு பற்றிய கலந்துரையாடலுக்கும் அதற்கான உங்கள் ஆலோசனைகளையும் கேட்டறியும் முகமாக வருகின்ற ஐனவரி மாதம் 31ஆம் திகதி மாலை 7 மணியளவில் இல 1225 Kennedy Road, Scarborough, இல் அமைந்திருக்கும் Karaikudy Chettinad Restaurant இல் நடைபெறவிருக்கும் இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு உங்கள் ஆரோக்கிமான கருத்துக்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் வரவுகளை முன்கூட்டியே பதிவு செய்வதற்காக கனடியத் தமிழர் தேசிய அவையினரின் தமிழ் ஊடகப் பேச்சாளர் கவிதா அவர்களுடன் பின்வரும் இலக்கத்துடன் 647-637-4803 தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
நன்றி
கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)
பணிமனை:10-5310 Finch Avenue East, Scarborough, ON
தொலைபேசி: 416.646.7624
மின்னஞ்சல்:info@ncctcanada.ca / இணையத்தளம்: www.ncctcanada.ca
கனடியத் தமிழர் தேசிய அவையினர் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் விடுக்கும் அழைப்பிதழ்
பதிந்தவர்:
தம்பியன்
30 January 2012



0 Responses to கனடியத் தமிழர் தேசிய அவையினர் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் விடுக்கும் அழைப்பிதழ்