Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள்சபை நோக்கி நேற்று லண்டனிலிருந்து ஆரம்பமான நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது.

பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து நேற்று காலை 11.18 மணியளவில் ஆரம்பமான இந்த நடைபயணத்தின்போது மாலை 2:00 மணியளவில் ரூட்டிங் பகுதி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள மாவீரர்கள் நினைவாலயத்திற்குச் சென்று மலர்வணக்கம் செலுத்தி மீண்டும் தமது நடைபயணத்தை தொடர்ந்து சென்ற வழியில் மிச்சம் பகுதியில் வைத்து வல்வை சமூகத்தினர் அவர்களை வரவேற்று மாலை அணிவித்து உபசரித்து வழியனுப்பி வைத்தனர்.

இந்த மனித நேய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணத்தை ஜெயசங்கர், சிவச்சந்திரன், குமார், மற்றும் வேற்றினத்தவரான paul, shaun உட்பட்ட ஐவர் மேற்கொண்டுள்ளனர். இவர்களோடு இணைந்து இந்த நடைபயணத்திற்கு ஆதரவு தெரிவித்தும், இவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் முகமாகவும் அமர்னாத், சேகர், சங்கீதன், விஜய், சத்தி, மணிவண்ணன், நிமலன், யோகி மற்றும் வேற்றினத்தவரான Graham ஆகியோர் நேற்றைய தினம் நடைபயணம் மேற்கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தமது நடை பயணத்தை சுமார் 19.5 மைகள் (31 கிலோமீற்றர்கள்) கடந்து நேற்றை நடைபயணத்தை Horley எனும் இடத்தை சென்றடைந்தது.

மீண்டும் இன்று காலை 10:00 மணிக்கு தமது நடைபயணத்தை ஆரம்பித்துள்ள இவர்கள், இன்றைய நடைபயணத்தை Newhaven எனும் இடத்தில் நிறைவுசெய்ய உள்ளனர்.










0 Responses to இரண்டாவது நாளாகத் தொடரும் லண்டனிலிருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம் (படங்கள், வீடியோ இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com