Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டிலக்ஷ்னா கொலை: மோப்ப நாய் உதவியுடன் 2வர் கைது.

பருத்தித்துறையைச் சேர்ந்த மாணவி இதயநாதர் மேரி டிலக்க்ஷனா படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எனக் கருதப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோப்ப நாய்களைப் பயன்படுத்தியே நேற்று முன்தினம் இப்படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை நேற்று முன்தினம் மாலை மாணவியின் சடலம் பருத்துத்துறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் கீழ் அல்வாய் வடக்கு, சக்கோட்டை பழைய தேவாலயத்தின் பொது மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளது.

அக்காவின் முன்னாள் காதலனே தங்கையைக் கொலை செய்தார் எனச் சந்தேகம்:

அதாவது குறித்த மாணவியின் அக்காவின் முன்னாள் காதலனே இவரைக் கடத்திச் சென்று பாலியல் ரீதியில் துன்புறுத்தி இறுதியில் கொலை செய்து விட்டு தப்பியுள்ளார் எனத் தகவல் கசிந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட மேரி டிலக்ஷனாவுக்கு நான்கு சகோதரிகள் உள்ளனர். இவரின் சகோதரி (அக்கா) ஒருவர் அந்த இடத்தைச் சேர்ந்த ஒருவருடன் காதல் கொண்டு சில வருடங்களாக கதைத்துள்ளார். அதன்பின்னர் அண்மையில் குறித்த சகோதரி வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரை திருமணம் செய்துவிட்டு அங்கு சென்றுவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடும் கோபமுற்ற காதலன் (சகோதரியை காதலித்தவர்) பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாகவே டிலக்க்ஷனா கொலைசெய்யப்பட்டார் எனவும் ஊர் மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

அதிர்வு

0 Responses to அக்காவின் முன்னாள் காதலனே தங்கையைக் கொலை செய்தார் எனச் சந்தேகம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com