Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அனைவரும் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் தமிழர்கள் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்று இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வாக்குறுதியை இலங்கை நிறைவேற்றும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

4 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றிருந்த இந்தியா வெளியுறவித்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். அப்போது விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

4 நாள் பயணத்தில் இலங்கை அதிபர் உள்ளிட்டோருடனான பேச்சுவார்த்தை திருப்பி அளித்தது. 13வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி அனைவரும் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் தமிழர்கள் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். இதனை இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஒட்டுமொத்த இலங்கையும் வளர்ச்சி நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. மக்களும், அரசியல் தலைவர்களும் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த வாக்குறுதியை இலங்கை நிறைவேற்றும் என இந்தியா எதிர்பார்க்கிறது, இந்திய நிதியுதவி திட்டத்தின்கீழ் தமிழர்கள் பகுதிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகள் திருப்தி அளிக்கிறது என்றார்.

0 Responses to தமிழர் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம் அவசியம்: இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com