ஜனவரி 30ம் திகதி வரை ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
'உச்சநீதிமன்ற நிபந்தனைகளின் போட்டியை நடத்துமாறும், போட்டியில் பங்கேற்கும் காளைகளை எந்த வகையிலும் துன்புறுத்தல் கூடாது எனவும், மாடுபிடி வீரர்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டுமெனவும்' இவ்வழக்கில் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை மாவட்டம் அவணியாபுரம், பாலமேடு, அலங்கா நல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு அடுத்த வாரம் நடத்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த வருடம் மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடை உத்தரவை மீறி தற்போது மீண்டும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது மாடுகளை கொடுமைப்படுத்துவதோடு, மனித உயிர் இழப்புக்களுக்கும் வழி வகுக்கும். இதனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



0 Responses to ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை : மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு