64 ம் ஆண்டில் தொடருகின்ற ஈழத் தமிழரின் துயர வாழ்வை உடைத்தெறிய உலகளாவிய போராட்டம். ஈழத் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழர் கொதித்தெழுந்து தமது எதிர்ப்பைப் காட்டுமாறு நா.க.த.அ. வேண்டுகோள் விடுக்கின்றது.
புலம் பெயர் நாடுகளில் சிங்கள நாட்டின் சுதந்திர தினத்தை தமிழர்கள் தமது துக்க தினமாகக் கொண்டாட வேண்டுமென்று அனைத்துத் தமிழ் மக்களையும் கேட்டுக் கொள்வதோடு பல்வேறு தமிழ் அமைப்புகளின் ஆதரவோடு நா.க.த.அ. ஒவ்வொரு நாட்டிலும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
கறுப்பு உடைகளையோ கறுப்புச் சின்னங்களையோ அணிந்து ஸ்ரீலங்கா துதரகத்தின் முன்போ அல்லது வேறு பொருத்தமான இடங்களிலோ எமது போராட்டங்களை முன்னெடுப்போம். தமிழர் அனைவரையும் பேதங்களை மறந்து ஒற்றுமையாய் போராட முன்வருமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.
பெப்ரவரி 4, 1948 சிங்களவருக்குச் சுதந்திரம். தமிழருக்குச் சுதந்திரம் எப்போது? சிங்களம் தம்மை ஆளட்டும், தமிழனை ஆள அவர்கள் யார்? ஆங்கில ஆட்சி சிங்களவருக்கு சிங்கள நாட்டைக் கொடுத்தது. தமிழ் ஈழத்தையும் ஏன் தாரை வார்த்தது. ஜனநாயகப் பெரும்பாண்மை என்ற பெயரில் சிறுபான்மை இனத்தை அடிமை கொள்வதா அல்லது இனத்தையே அழித்து விடுவதா? ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதா?
சிங்கள ஆட்சியின் ஆக்கிரமிப்பை உடைப்போம். அவர்களின் கொலை, கற்பழிப்பை நிறுத்துவோம். பொருளாதார அழிப்பைத் தடுப்போம். மொழி அழிப்பை எதிர்ப்போம். மதத் திணிப்பை ஒழிப்போம். கடத்தல் காணாமற் போதலைத் தடுப்போம். மண் பறிப்பை முடக்குவோம். சிங்களத் திணிப்பைத் தடுப்போம். கலாச்சாரச் சீரழிவைத் தகர்ப்போம். இராணுவ ஆட்சியைச் சிதைப்போம். அந்நியன் படையை அகற்றுவோம். கருத்துச் சுதந்திரம் பெறுவோம். ஒட்டுமொத்த இன அழிப்பை எதிர்த்துப் போராடுவோம்.
மகிந்த அரசு கொலை வெறி அரசு, கொடிய அரசு, சர்வாதிகாரக் கொடுங்கோல் அரசு, மனிதாபிமானமற்ற அதர்ம அரசு. தமிழன் என்றால் மனிதன் இல்லையா?. காலால் உழக்கிக் கசக்கி எறிகிறான். அடிமை போல ஆள நினைக்கிறான். தமிழா நீ இன்னும் தூங்கலாமா? விரக்தியுற்று விலகலாமா?. உன் சொந்தங்களை மறக்கலாமா?.
சீறி எழுந்து போராடு. நீதி கேட்டுப் போராடு. வீதிக்கு வந்து போராடு. வீறு கொண்டெழுந்து போராடு.
பெப்ரவரி 4 சனிக்கிழமை உனக்காய் விடியும் நாளாகும். அனைவரும் திரண்டு வாருங்கள் அணியணியாய்க் கூடுங்கள். உலகத்தை ஒரு முறை உலுக்குங்கள். மார்ச்சில் வரவிருப்பது மனித உரிமைப் பேரவைக் கூட்டம். எமது இந்தப் போராட்டம் அதற்கொரு வலுவைக் கொடுக்கட்டும். சிறிலங்காவைக் கலக்கட்டும். சர்வதேசம் நம்பக்கம் சாதகமாகத் திரும்பட்டும். நீதி ஒருநாள் நமக்காகும். நாங்கள் பெறுவோம் தமிழ் ஈழம்.
கலாநிதி இராம் சிவலிங்கம்
உதவிப் பிரதமர்
நா.க.த.அ.
உலகமே நீதி வழங்கு! ஈழத் தமிழரின் இன்னலைத் தீர்த்துவை!!. தமிழீழ அரசின் நீதிக்கான போராட்டம்
பதிந்தவர்:
தம்பியன்
31 January 2012



0 Responses to உலகமே நீதி வழங்கு! ஈழத் தமிழரின் இன்னலைத் தீர்த்துவை!!. தமிழீழ அரசின் நீதிக்கான போராட்டம்