இராமேஸ்வரம் வரை வந்தும் பாவத்தைத் தீர்க்க முடியாமல் திரும்பிப் போயிருக்கிறார், ராஜபக்சவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன்! ஆறாத ரணமாக ஈழப் பிரச்சினை இன்னும் இருப்பதன் அடையாளம்தான் இந்த சம்பவம்! இவ்வாறு ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரியான நிருபமா ராஜபக்சவின் கணவர் இவர். இலங்கைத் தமிழரான இவர், அதிக தெய்வ நம்பிக்கை கொண்டவர்.
கடந்த ஆண்டு நடேசன் தனது மனைவி நிருபமாவுடன் இராமேஸ்வரம் வந்தார். அப்போது, இங்குள்ள தமிழ் இன ஆதரவாளர்கள் அவர்களுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்தி எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஆனால், பொலிஸார் பாதுகாப்பு கொடுத்து அவர்களைப் பத்திரமாக இங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி இரவு, நடேசன் தனது உறவினர் ஒருவருடன் இராமேஸ்வரம் வந்து, பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் தங்கியிருக்கிறார்.
அன்று இரவு இராமநாதசுவாமி கோயிலுக்கு வழக்கமாக வரும் யாத்திரைவாசிகள் போலவே பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் நீராடிய பின், சுவாமி தரிசனமும் செய்துவிட்டு நடேசன் தனது இருப்பிடத்துக்குத் திரும்பினார்.
பரிகார பூஜை செய்வதற்காக ஆனந்த் தீட்ஷித் என்ற புரோகிதரை நாடியுள்ளார்.
அடுத்த நாள் காலை, இராமேஸ்வரம் நடுத்தெருவில் உள்ள ஆனந்த் தீட்ஷித்தின் வீட்டிலேயே பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதற்குள் நடேசனின் வருகை எப்படியோ வெளியே பரவி விட்டது. இதையடுத்து, ம.தி.மு.க மற்றும் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நடேசனுக்குக் கறுப்புக் கொடி காட்டுவதற்காக, அதிகாலை 4 மணி முதல் காத்திருந்தனர்.
இதை எதிர்பார்க்காத பொலிஸார், நடேசனை சுற்றுச்சாலை வழியாக அக்கினி தீர்த்தக் கரைக்கு அழைத்துச் சென்றனர். கடலில் தீர்த்தமாடியதும் பூஜை நடக்க இருந்த ஆனந்த் தீட்ஷித்தின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் பொலிஸார்.
இந்தத் தகவல் போராட்டக்காரர்களுக்கும் எட்டியது. உடனே, அந்த வீட்டுக்கு முன் குவிந்த ம.தி.மு.க-வினரும், நாம் தமிழர் இயக்கத்தினரும் ராஜபக்சவுக்கு எதிராகவும், நடேசனை நாட்டை விட்டு வெளியேறுமாறும் கோஷமிட்டனர்.
இதனைக் கண்டு அதிர்ந்த நடேசன், ''நான் ராஜபக்சவின் தம்பியல்ல... ராஜபக்சவின் தம்பியல்ல...'' எனத் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார்.
உடனே ஆத்திரமடைந்த ஒருவர் நடேசனின் கையைப் பிடித்து இழுக்க, ஒருவர் அவர் மீது செருப்பைத் தூக்கி அடிக்க அந்த இடமே ரணகளமானது.
பூஜை நடத்திய ஆனந்த் தீட்ஷித்துக்கும் அடி விழுந்ததாகச் சொல்கிறார்கள். வீட்டின் மீது கல் எறிந்து கலவரம் செய்திருக்கிறார்கள்.
உடனே, பொலிஸார் போராட்டக்காரர்களைக் கலைத்து, அங்கிருந்து நடேசனை பத்திரமாக அழைத்துச் சென்று திருச்சிக்கு காரில் ஏற்றி அனுப்பினார்கள்.
காரில் ஏறிய நடேசனிடம் பேசினோம். ''பிரச்சினை ஒன்றும் நடக்கல்லை. நான் 20 ஆண்டுகளாக சாமி கும்பிட இங்க வந்துட்டுருக்கேன். என்ட குடும்பத்துக்காகத்தான் கோயிலுக்கு வந்தன். எனக்கும் ராஜபக்சவுக்கும் சம்பந்தம் ஒன்றும் இல்ல. அது தெரியாமப் போராட்டம் செய்த ஆட்கள் அரசியல் செய்யிறாங்க'' என்றபடி கிளம்பினார்.
இந்த சம்பவம் குறித்துப் பேசிய ம.தி.மு.க. இளைஞர் அணி மாநிலத் துணை அமைப்பாளர் கராத்தே பழனிச்சாமி, ''முதிய வயதில் சிகிச்சை பெற வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பிய மத்திய அரசு, ராஜபக்ச மற்றும் அவரது உறவினர்களுக்கு உச்சபட்சப் பாதுகாப்பு கொடுத்து ஊர் ஊராக அழைத்துச் செல்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம்'' என்றார்.
நடந்த தாக்குதல் குறித்து, புரோகிதர் ஆனந்த் தீட்ஷித்திடம் கேட்டோம். ''போராட்டம் செஞ்சவங்க முதல்லயே எங்கிட்ட சொல்லியிருந்தா... நான் இந்த பூஜைக்கு சம்மதிச்சு இருக்க மாட்டேன்'' என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக கராத்தே பழனிச்சாமி, சின்னதம்பி, கண்.இளங்கோ உள்ளிட்ட ஏழு பேரைக் கைது செய்துள்ள பொலிஸார், அவர்கள் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆறாத ரணமாக ஈழப் பிரச்னை இன்னும் இருப்பதன் அடையாளம்தான் இந்த சம்பவம்!
ஜூனியர் விகடன்
பாதியில் முடிந்த பரிகார பூஜை! விரட்டி அடிக்கப்பட்ட ராஜபக்ச மைத்துனர் நடேசன்!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
17 January 2012



நடந்த சம்பவம் எப்படியாயினும் கடுமையான தாக்கங்களைக் கொண்டிருப்பதுடன் அதை தனிமைப்படுத்தப்பட்ட தனியான ஒரு சம்பவமாகப் பார்க்க முடியாது. இராமேஸ்வரத்தில் நடைபெற்ற ரௌடித்தனம் அமைதியை நேசிக்கும் தமிழ் நாட்டு மக்களில் தொந்தரவு செய்யும் ஒரு பகுதியினரின் ஸ்ரீலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகள் எனும் நோயின் பயங்கரமான அறிகுறியே. ஸ்ரீலங்காவுக்கும் சில ஸ்ரீலங்காவாசிகளுக்கும் எதிராகத் திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகள் மாநிலத்தில உள்ள சில சிறிய அரசியற் கட்சிகளின் செயற்பாட்டாளர்களால் அடிக்கடி இங்கு நடைபெறுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் மற்றும் அதைப் பின்தொடர்பவர்கள் எனக் கருதப்படும் அரசியல்சக்திகளினால் சமீப காலமாக ஜனாதிபதி ராஜபக்ஸவுக்கும் மற்றும் அவரது அரசாங்கத்துக்கும் எதிராக இங்கு கடும் விரோதம் காண்பிக்கப்படுகிறது. இந்த சக்திகள் தமிழ் நாட்டுக்கு வருகை தரும் ஸ்ரீலங்கா அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றன. இம் மாநிலத்தில் இனரீதியான ரௌடித்தனம் உதவியற்ற சிங்கள சுற்றுலாப்பயணிகள் மற்றும் யாத்திரிகள் மீது காண்பிக்கப்படுகிறது. இந்த அப்பாவி மக்கள் ராஜபக்ஸ ஆட்சியினோடு எந்த தொடர்பையும் கொண்டிராதவர்கள்.
இராமேஸ்வரத்தில் சமீபத்தில் நடைபெற்றது, ஒரு ஸ்ரீலங்காத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகளே, அவை அவரது இனத்தின் காரணமாக நடத்தப்பட்டதல்ல ஆனால் அவர் ராஜபக்ஸ குடும்பத்தின் ஒரு தூரத்து உறவினராக இருந்து ராஜபக்ஸவின் ஆட்சியின் நலன்வேண்டி சமயச் சடங்குகளில் ஈடுபட்டுள்ளார் எனக் கருதப்பட்டதுதான் அதற்கான காரணம்.
கொழும்பு – 7 ,ஹோட்டன் இடத்தில், வசிக்கும் 57 வயதான திருக்குமார் நடேசன், யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு இலங்கைத் தமிழராவார். அவருடைய தந்தை யாழ்ப்பாணம் அராலியையும், தாயார் மானிப்பாயையும் சேர்ந்தவர்கள். திரு மற்றும் குமார் என இரண்டு பெயர்களாலும் அவரது நண்பர்களால் அழைக்கப்படும் அவர், கொழும்பிலேயே பிறந்து வளர்ந்து, கொழும்பு புனித.சூசையப்பர் கல்லூரியில் கல்வி கற்றவராவார். பின்னர் அவர் ஐக்கிய ராச்சியத்திலுள்ள மிடில்செக்ஸ் பல்கலைக் கழகத்தில் வணிகக் கற்கை நெறியில் சிறப்பு இளநிலைப் பட்டம் பெற்றார்.
திருக்குமார் நடேசன் பிரதானமாக முதலீடு, சொத்து அபிவிருத்தி, மற்றும் விருந்தோம்பல் துறைகள் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் ஒரு வணிகத் தொழில் முனைவராவார். அவர் ஹோட்டல்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவரும் மற்றும் ஆசிய திட்டமிடல் சேவைகள் நிறுவனத்தின் தலைவரும், மற்றும் லைட்ஹவுஸ் மற்றும் வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல்களின் நிருவாக இயக்குனராகவும் உள்ளார். இந்தப் பொறுப்புகளுக்கு அப்பால் நடேசன் சுதந்திரமான வணிக மற்றும் முதலீட்டு ஆலோசகராகவும் கடமையாற்றுகிறார்.
நிருபமா
நடேசன், ராஜபக்ஸவுக்கு உறவினராக மாறியது, ஜோர்ஜ் மற்றும் லலிதா ராஜபக்ஸ தம்பதியரின் மகளான நிருபமா தீபிகா ராஜபக்ஸவை மணம் செய்து கொண்டதால்தான். நிருபமா என்ற பெயரால் பொதுவாக அழைக்கப்படும் அவர் பொதுசன ஐக்கிய முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், நீர்வினியோக வடிகாலமைப்பு உதவி அமைச்சராகவும் உள்ளார். நிருபமாவின் தந்தைவழிப் பாட்டனாரான டிஎம். ராஜபக்ஸதான் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் அரசியலில் ஈடுபடுவதை ஆரம்பித்;து வைத்த அவர்களது முதலாவது குடும்ப அங்கத்தவராவார் .1936ல் அவர் அம்பாந்தோட்டைத் தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு அரச கவுன்சிலரும் மற்றும் “றுகுணுச் சிங்கம்” எனும் பெயரால் புகழப்பட்டவருமாவார். 1945ல் அவரது மறைவுக்குப் பின்னர் அவரது இளைய சகோதரரான டிஏ.ராஜபக்ஸ அதற்காக இடம்பெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு அரச கவுன்சிலராக தெரிவானார். அம்பாந்தோட்டை பின்னர் திஸ்ஸமகரகம மற்றும் பெலியத்த எனும் இரண்டு தொகுதிகளாக 1947ல் பிரிக்கப்பட்டது.
டொண் அல்விஸ் ராஜபக்ஸ ஐக்கிய தேசியக் கட்சிக்காக 1947ல் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டார். அவர் 1951ல் கட்சிமாறி எஸ்டபிள்யுஆர்டி பண்டாரநாயக்காவுடன் சேர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை (எஸ்.எல்.எப்.பி) ஆரம்பித்த இணை நிறுவனர்களில் ஒருவராக மாறினார். டிஏ.ராஜபக்ஸ எஸ்.எல்.எப்.பி சார்பாக 1952, 56 மற்றும் 1960 ஜூலையில் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவா 1960 மார்ச்சில் நடந்த தேர்தல் மற்றும் 1965ல் நடைபெற்ற தேர்தல் ஆகியவற்றில் தோல்வியடைந்தார். 1967 நவம்பரில் டிஏ.ராஜபக்ஸவின் மறைவுக்குப்பின்னர், அவரது மகன் மகிந்த பெலியத்த தொகுதி எஸ்.எல்.எப்.பி அமைப்பாளராக ஆகி அதன்பின்னர் 1970ல் அத்தொகுதி பாராளுமன்ற அங்கத்தவரானார். அப்போது அவர்தான் 24 வயதுடைய பாராளுமன்றத்திலுள்ள ஆகவும் இளைய அங்கத்தவராக இருந்தார்.
டிஎம். ராஜபக்ஸவின் மகன்களான லக்ஸ்மன் மற்றும் ஜோர்ஜ் ஆகியோரும் அரசியலுக்குள் நுழைந்தார்கள். எப்படியாயினும் லக்ஸ்மன் ராஜபக்ஸ அரசியலில் நிலையற்ற தன்மையைகொண்ட கடிவாளமில்லாத அரசியல்வாதியாக இருந்தபோதிலும், அவரது சகோதரர் ஜோர்ஜ் நிலையான தன்மையுள்ள வெற்றிகரமான அரசியல்வாதியாக உருவானார். அவர் புதிதாக உருவாக்கப்பட்ட முல்கிரிகல தொகுதியில் எஸ்.எல்.எப்.பி வேட்பாளராக 1960 மார்ச் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார்.
ஜோர்ஜ் ராஜபக்ஸ 1960, 1965, மற்றும் 1970களில் நடந்த தேர்தல்கள் யாவற்றிலும் முல்கிரிகல தொகுதியில் தோற்கடிக்க முடியாத ஒரு வேட்பாளராகவே இருந்தார். அவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்தில் சுகாதார மற்றும் மீன்பிடி அமைச்சராகக் கடமையாற்றினார். 1976 ல் ஜோர்ஜின் மரணத்தின்பின் அவரது சகோதரர் லக்ஸ்மன் முல்கிரிகல தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அரசியலில் பலமான ஆசீர்வாதம் பெற்ற ஜோர்ஜ் ராஜபக்ஸவின் மகளான நிருபமா 1983ல் இடைத்தேர்தல்களில் போட்டியிட்டபோது அவருக்கு வயது 20 மட்டுமே. அதில் அவர் தோல்வியடைந்தாலும் அதன் பின் வந்த தேர்தல்கள் மூலமாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்ததுடன் பின்னர் பிரதி அமைச்சராகவும் தெரிவானார். நிருபமா பிரதானமாக மகிந்த ராஜபக்ஸவின் பெறாமகள் எனச் சொல்லப்பட்டாலும், ஜனாதிபதியின் சகோதரர்களான சாமல், கோட்டபாய, மற்றும் பசில் ஆகியோரும் அவரது சிறிய தந்தையர்களே.
திருக்குமார் நடேசன்
திருக்குமார் ஜனாதிபதியுடன் இணைப்பை ஏற்படுத்தியது, நிருபமா மூலமான தொடர்பு காரணமாகவே. இந்த உறவுமுறைதான் அந்த தம்பதியர் இந்தியாவுக்கு குறிப்பாகத் தமிழ் நாட்டுக்கு விஜயங்களை மேற்கொள்ளும்போது தொந்தரவுகளுக்கு ஆளாவதற்கு காரணமாக அமைந்தது. சில வருடங்களுக்கு முன்புகூட அவர்கள் அந்த மாநிலத்தில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி காவல்துறையினரின் பாதுகாப்பை பெறவேண்டி ஏற்பட்டது.
கொழும்பில் வளர்க்கப்பட்டிருந்தாலும்கூட திருக்குமார் ஒரு பயபக்தியுள்ள இந்து, அவர் மத மற்றும் கலாச்சார நோக்கங்களுக்காக அடிக்கடி இந்தியாவுக்கு விஜயம் செய்வதுண்டு. மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான வட இந்தியாவிலுள்ள பெனாரஸ், கயா,மற்றும் ஹரித்துவார் போன்ற இடங்களுக்கும் தென்னிந்தியாவிலுள்ள திருப்பதி, போன்ற அநேக இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். ஒவ்வொரு வருடமும் கந்தஷஷ்டி காலங்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று கந்தஷஷ்டி கவசத்தை பராயணம் செய்வதுண்டு.
திருக்குமார் நடேசன் அடிக்கடி இராமேஸ்வரத்தில் உள்ள பிரபலமான இராமநாதசுவாமி கோவிலுக்குச் சென்று அங்கு குடிகொண்டுள்ள சிவபெருமானிடம் வழிபாடு செய்வதுண்டு. பெரும்பாலும் யாத்திரிகர்களும் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் வந்து குவியும் நகரம்தான் இராமேஸ்வரம். சுவராஸ்யமான வகையில் இராமேஸ்வரமும், இராமநாதசுவாமி கோவிலும் நம்பிக்கை மற்றும் வரலாற்று அனுபவம் என்பனவற்றால் ஸ்ரீலங்காவுடன் தொடர்பு கொண்டிருக்கிறது.
தமிழ் நாட்டு இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாம்பன் தீவில் அமைந்துள்ள ஒரு கரையோர நகரம்தான் இராமேஸ்வரம். பாம்பன் தீவு மன்னார் குடாவிலுள்ள இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது, இந்தியாவின் பிரதான நிலப்பரப்புடன் இ;து பாம்பன் கால்வாய் என்கிற நீர்ப் பரப்பின்மேல் அமைந்துள்ள பாம்பன் பாலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம், ஸ்ரீலங்காவிலுள்ள மன்னார் தீவிலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவிலுள்ளது. ஸ்ரீலங்காவின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கு வழமையாக இந்திய இலங்கை படகுச்சேவை நடைபெற்று வந்துள்ளது. சந்தர்ப்ப வசமாக தனுஷ்கோடிதான் தற்போது இலங்கைக்கு வருகை தரவிருக்கும் பிரபல விஞ்ஞானியும் முன்னாள் இந்திய ஜனாதிபதியுமான ஏஜே.அப்துல்கலாமின் பிறந்த இடமாகும்.
இராமேஸ்வரம்
Rameswaramஇராமேஸ்வரம் எனும் பெயர் விளக்குவது விஷ்ணு கடவுளின் அவதாரமாகிய அயோத்தியின் அரசர் இராமரையே.புராணக் கதைகள் மற்றும் நம்பிக்கைகளின்படி இராமர் தனது வானர சேனைகளின் உதவியுடன் இராமேஸ்வரத்திலிருந்து ஸ்ரீலங்காவுக்கு படையெடுப்பு நடத்தி கடத்திச் செல்லப்பட்ட அவரது மனைவியை லங்காபுரி அரசன் இராவணனின் பிடியிலிருந்து மீட்பதற்காக இராமர் அணை அல்லது இராம சேது(ஆதாமின் பாலம்) எனும் பாலத்தைக் கட்டினார்.
புராணக்கதைகளின்படியும் சில இராமயண பதிப்புகளின்படியும் இராமேஸ்வரம்தான் இராமர் சிவபெருமானிடம் மன்னிப்புக் கோரியும் மற்றும் இராவணனுடன் போரிட்டபோது தன்னால் செய்யப்பட்ட பாவங்களின் குற்றச்செயல்களிலிருந்து விடுவிக்கும்படி கோரியும் தவம் செய்த இடம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலின் பிரதான கடவுளாக சைவர்களின் கடவுளான சிவபெருமான் உள்ளபோதும், சைவர்கள் அதேபோல வைஷ்ணவர்கள் ஆகிய இருபகுதியினரும் பெரும் எண்ணிக்கையில் இங்கு வந்து வழிபாடு செய்வதால்,சகல இந்துக்களுக்கும் புனிதமான இடங்களில் ஒன்றாக இராமேஸ்வரம் உள்ளது.
காக்கும் கடவுளான விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவர்களுக்கு விஷ்ணுவின் அவதாரங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்;ட நான்கு பிரதான வழிபாட்டுத்தலங்கள் எனப் பொருள்பட அழைக்கப்படும் “சார் தாம்” என்பனவற்றில் பத்ரிநாத், பூரி ,மற்றும் துவாரகா என்பனவற்றுடன் இராமேஸ்வரமும் ஒன்றாகும். பத்ரிநாத் வடக்கிலும், இராமேஸ்வரம் தெற்கிலும், துவாரகா மேற்கிலும், பூரி கிழக்கிலுமாக புவியல் சதுரமாக அமைந்துள்ளன.
இராமேஸ்வரம் கோவிலின் பிரதானமான கடவுளான இராமநாதசுவாமி சிவலிங்கவடிவில் காட்சியளிக்கிறார். ஜோதி லிங்கம் என அழைக்கப்படும் இங்குள்ள லிங்கமானது இந்தியாவிலுள்ள பன்னிரண்டு முக்கிய சிவ வழிபாட்டுத் தலங்களில் உள்ள விக்கிரகங்களில் ஒன்றாகும். இந்த கோவில்களில் சிவபெருமானை ஒளி வடிவத்தில் (ஜோதி லிங்கம்)வழிபாடு செய்வதுண்டு.
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில்களில், காசி விஸ்வநாதர் கோயில் வட இந்தியாவிலுள்ள வரணாசியிலும்(பெனாரஸ்) மற்றும் இராமநாதசுவாமி கோவில், தென்னிந்தியாவிலுள்ள இராமேஸ்வரத்திலும் அமைந்துள்ளன, இவை இரண்டும் மிக முக்கியமானவைகளாக போற்றப்படுகின்றன இந்த இரண்டு இடங்களும் இறந்தவர்களுக்கான இறுதிக் கிரியைகள் செய்வதற்கும் அவர்களின் சிதறல் அல்லது அஸ்தியை கரைப்பதற்கும் மற்றும் முன்னோர்களைச் சாந்தப்படுத்தும் சடங்குகளை செய்வதற்கும் பயன்படுகின்றன.
இராமநாதசுவாமி
Rameswaram-Dhanushkodi-Bridgeஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களுக்கும் மற்றும் இராமேஸ்வரம் கோவிலுக்கும் இடையில் ஒரு விசேட உறவு உள்ளது. ஒருகாலத்தில் இராமேஸ்வரம் கோவிலுக்கு வடக்காக உள்ள நெடுந்தீவு எனும் தீவில் பசுமாடுகள் வளர்க்கப்பட்டு கோவிலில் நடக்கும் அபிஷேகத்துக்காக தினசரி பால் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கோவிலுக்குச் சொந்தமான பல சொத்துக்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளன .யாழ்ப்பாணம் கன்னாதிட்டியில் உள்ள பல நகைக்கடைகள் இராமநாதசுவாமிக்கு சொந்தமாக உள்ளன.
பல வருடங்களாக பக்தர்கள் இராமேஸ்வரத்துக்கு கூட்டமாகச் செல்வதுண்டு. அநேகர் நிரந்தரமாகவே இராமேஸ்வரத்தில் குடியேறியுள்ளனர் மற்றும் கோவிலின் கிழக்கு கோபுர சுற்றாடலில் ஒரு சிறிய யாழ்ப்பாண குடியிருப்பே அமைந்துள்ளது. அங்கு குடியேறியுள்ள யாழ்ப்பாணத் தமிழர்கள் மத்தியில் கனகசுந்தரம் எனும்; ஒரு பாடசாலை ஆசிரியர், முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு ஆங்கிலம் போதித்தவராவார். தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக முத்திரைபதித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தவமணிதேவியும் தனது கடைசி நாட்களில் ஒரு பிராமண ஐயரைத் திருமணம் செய்து இராமேஸ்வரத்தில்தான் குடியேறியிருந்தார்.
அங்கு ஒரு விசேடமான யாத்திரிகர் மடம் ஒன்று விசேடமாக யாழ்ப்பாண பக்தர்களுக்காக வேண்டி யாழ்ப்பாணத்தார் திருமடம் என்கிற பெயரில் கோவிலின் வடக்குவீதியில் அமைந்துள்ளது. அது சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் திருத்தி அமைக்கப்பட்டது. பின்னர் அந்தக் கட்டிடம் தமிழ் நாட்டு அரசாங்கத்தால் கையேற்கப்பட்டு தற்சமயம் கோவில் அலுவலகமாகப் பயன்பட்டு வருகிறது. இந்தத் தொடர்புகள் யாவும் வெளிப்படுத்துவது, யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் மற்றும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் உள்ள தொடர்ச்சியான உறவுகளைத்தான். இந்தப் பின்னணிக்கு எதிராகத்தான் யாழ்ப்பாணத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட இந்துமத பக்தர் ஒருவாமீது சமீபத்தைய காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டதாகப் பார்க்க வேண்டியுள்ளது. எப்படியாயினும் அது வலியுறுத்துவது அதை தனித்துவமான ஒரு சம்பவமாகப் பார்க்கவேண்டும் என்பதையல்ல ஆனால் ஸ்ரீலங்கா மற்றும் ராஜபக்ஸ மீதான எதிர்ப்புகள் காரணமான கிளர்ச்சியின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிலுள்ள தீவிரவாத இனவெறி சகத்திகள் மேற்கொள்ளும் தூண்டுதல்களாகவே பார்க்க வேண்டும். இதர பக்தர்களைப் போலவே திருக்குமார்; நடேசனும் பல வருடங்களாக நடத்தும் விசேட பூஜைக்காகவும் மற்றும் சினம் தணிவிக்கும் நோக்கத்துக்கான வேள்விகளுக்குமாக இராமேஸ்வரம் வந்துள்ளார். அவர் அப்படிச் செய்வது தன்னுடைய சுய நோக்கங்களுக்காக வேண்டியே. ஆனால் துரதிருஷ்டவசமாக அவருடைய இராமேஸ்வர விஜயம் அவரைத் தாக்கிய கூட்டமாகிய சில அரசியல் சக்திகளினால் அவர் ஜனாதிபதி ராஜபக்ஸவுக்கு வேண்டியே பூஜைகளை நடத்துகிறார் என குற்றம் சாட்டும் விதத்தில் முற்றிலும் தவறாக விளக்கப்பட்டுள்ளது. theneer pookal