இலங்கைக்கு ஈரான் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் என தெரிவித்துள்ளது.
அணுவாயுத சர்ச்சையால், அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் பல ஈரானுக்கு பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால், இலங்கையினால் ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படும் என அச்சம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இலங்கைக்கு எண்ணெய் விநியோகம் செய்வதில் எவ்வித பாதில்லும் இல்லை எனவும், தாம் தொடர்ந்து இறக்குமதி செய்வோம் எனவும் ஈரானிய தூதுவர் மொஹ்மட் நாபி ஹசானிபேர் தெரிவித்துள்ளார். ஆனால் ஓமான் மற்றும் கட்டார் போன்ற நாடுகளிலிருந்து மசகு எண்ணெயை பெறுவதற்கு இலங்கை அரசு தற்போது கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.



0 Responses to இலங்கைக்கு தொடர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும்: ஈரான்