Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா அமைதி காக்கும் படை நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை இணைத்துக் கொள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமனம் வழங்கவில்லை என அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமைதி காக்கும் படை நடவடிக்கைகளுக்கான குழுவில் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்,

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஐ.நாவின் அமைதி நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு நியமித்தது ஐ.நா பொதுச்செயலர் அல்ல. அவரை ஆசிய பசுபிக் குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகள் தான் இந்தப் பதவிக்குத் தெரிவு செய்தன என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில், போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்கும் சிறப்புக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளது குறித்த அனைத்துலக அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனிடையே இந்த நியமனம் தொடர்பாக ஐ.நாவிடம் இருந்து அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடப்படுவதற்கு முன்னதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவே கொழும்பிலுள்ள ஊடகங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றிய தகவலை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to அமைதி காக்கும் படையில் சவேந்திர சில்வாவை ஐ.நா பொதுச் செயலர் நியமிக்கவில்லை!- மார்ட்டின் நெர்ஸ்க்கி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com