
கனடாவின் ரொறன்ரோவில் வசித்து வந்த சிவலதா செல்லத்தம்பி என்ற 31 வயதுடைய பெண்ணை காணவில்லையென்றும் அவரைக் கண்டுபிடிக்க உதவிபுரியுமாறு கனடியத் தமிழ்க் காங்கிரஸினூடாக தமிழர் சமூகத்தை கனடியப் பொலிஸ் நாடியுள்ளது.
ஜேன் அன்ட் பிஞ்ச் சந்திப்பை அண்டிய பகுதியில் வசித்து வந்த சிவலதா செல்லத்தம்பி என்ற பெண் கடந்த யூன் 15ம் திகதி, 2011ல் இருந்து காணாமல் போய் விட்டார் என்றும் அவர் 150 இராத்தல் எடையுடையவர் என்றும் ஐந்து அடி ஐந்து அங்குலம் உயரமுடையவர் என்றும் ரொறன்ரோப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவருடைய பாதுகாப்பையிட்டு தாங்கள் கவலைப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார் இதுபற்றிய தகவல்கள் தெரிந்திருந்தால் தங்களுடன் 416,808,3100 என்ற இலகத்திலோ அல்லது யார் தகவல் தருவது என்று தெரியாமல் தகவல் தர விரும்பினால் 416.222.8477 [416−222−TIPS] என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது என்ற Crime Stoppers முகப்பதிவுப் பக்கத்திலோ அல்லது www.222tips.com என்ற இணையத்திலோ தரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to கனடாவில் தமிழ் பெண்ணைக் காணவில்லை! தேடுகிறது பொலீஸ்!