இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் எங்களை ஏமாற்றுமாகவிருந்தால் வுடக்கு கிழக்கு மக்களுடன் புலம்பெயர்ந்த மக்களையும் அணிதிரட்டி மாபெரும் அகிம்சை ரீதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு கல்விப் பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி சித்திவிநாயகர் மகா வித்தியாலயத்தின் மேடை திறப்பு விழாவும் ஆண்டு ஒன்றுக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் அருள்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் டேவிட் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எமது வடக்கு கிழக்கில் கடந்த 30 வருட காலமாக ஒரு போராட்டம் இடம்பெற்றது. போராட்டம் இடம்பெற்றாலும் கூட வடக்கு கிழக்கில ஒழுக்கம் என்பது மிகவும் கட்டுப்பாடாக இருந்துகொண்டிருந்தது.
இன்று பத்திரிகை செய்திகளை பார்க்கின்றபோது யாழ்ப்பாணத்தில் கலாசார சீர்கேடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அரசாங்க அதிபரே அதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதேபோன்று மட்டக்களப்பிலும் கலாசார சீர்கேடுகள் இருக்கின்றது. ஆனால் அவை வெளிவராமல் இருக்கின்றன.
இவ்வாறான கலாசார சீர்கேடுகளை எமது தமிழ்க் கல்வியிலே இருந்து பல சக்திகள் திட்டமிட்டு சதிசெய்துகொண்டிருக்கின்றன. இவர்களுக்கு நாங்கள் ஒருபோதும் துணைபோகக்கூடாது.
பாடசாலைக்கு மாணவர்களை அனுப்பிவிட்டு ஆசிரியர்கள் அனைத்தையும் கவனிப்பார்கள் என்று இருந்தால் நிச்சயமாக ஒழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்க முடியாது. ஒழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்க வேண்டுமாக இருந்தால் பெற்றோர் தமது அரவணைப்பிலும் கண்காணிப்பிலும் பிள்ளைகளை வைத்திருக்க வேண்டும்.
கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரையும் அதற்குப் பின்னர் பல்கலைக்கழகம் சென்றாலும் கூட இன்று பல சீரழிவுகள் இருந்துகொண்டிருக்கின்றன. பெற்றோர் கண்காணிப்பாக இருந்தால் மட்டுமே எமது தமிழ்க் கல்வியை தமிழ் மாணவரின் கல்வியை நல்லதொரு பிரஜையை உருவாக்கக்கூடிய கல்வியாக உருவாக்க முடியும். ஏங்கள் சிந்தனை ஒன்றாக இருக்க வேண்டும்.
எமது கட்சியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பொறுத்தமட்டில் இந்த அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியாக இருந்துகொண்டிருக்கிறோம். நாங்கள் அபிவிருத்திக்காக பாராளுமன்றம் செல்லவில்லை. ஏனக்கு நீங்கள் வாக்களிப்பதாக இருந்தால் வேலைவாய்ப்புக்காகவோ பாலம் போட்டுத் தருவதற்கோ உத்தியோகத்திற்காகவோ வாக்களிக்க வேண்டாம் என்று நான் தேர்தல் பிரசாரத்தின்போதே கூறியிருந்தேன்.
எனக்கு நீங்கள் வாக்களிப்பதாக இருந்தால் கொள்கை ரீதியாக தமிழ் மக்களுக்காக வடக்கு கிழக்கு மக்களுக்காக சிறந்த ஒரு அதிகாரப் பகிர்வு கிடைக்க வேண்டும் இதமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு வழங்க வேண்டும் இ தமிழர் தமிழராக வாழ்வதற்கு குரல் கொடுப்பதற்காhக இருந்தால் எனக்கு வாக்களியுங்கள் என்று கூறியிருந்தேன். அந்த வகையில்தான் நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன்.
இருந்தாலும் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைக்கும் தொகை 50 இலட்சம் ரூபா ஆகும். இந்த 50 இலட்சம் ரூபாவிலே என்னால் முடிந்தளவு பாடசாலைகளுக்கு உதவிவருகின்றேன்.
படுவான்கரையை மையப்படுத்தி பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்தாலும் கூட நகர்ப்பகுதியிலே இருக்கின்ற இவ்வாறான பாடசாலைகளை மையப்படுத்தி வேலைகளை என்னால் முடிந்தளவு நான் செய்திருக்கிறேன்.
குமாரசாமி ஐயா பாடசாலைக்கு ஒரு மேடை அமைத்துத் தரும்படி கேட்டிருந்தார். அதை நான் நிறைவேற்றியிருக்கிறேன். புhடசாலை அதிபர் அவர்கள் பான்ட் வாத்தியங்களை கேட்டிருக்கிறார். அதை இந்த 2012ஆம் ஆண்டு தருவதற்கு முயற்சி செய்கிறேன். இந்தப் பாடசாலைக்கு என்னால் முடிந்த விடயங்களை நான் செய்வேன்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறது. இந்த 2012ஆம்ஆண்டு என்ன நடக்கும் என்று தமிழர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த 2011ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை என்ற நாடகத்திலே நாங்கள் இறங்கியிருந்தோம். 17சுற்றுப் பேச்சுவார்த்தையிலே காலத்தை கடத்தியிருந்தோம். ஏங்களை இலங்கை அரசாங்கம் ஏமாற்றியிருக்கின்றது.
இன்று பி.ப 3மணிக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது ஒரு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள இருக்கின்றது. அரசாங்கத்தின் நோக்கம் என்பது தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கொடுப்பது அல்ல. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கொடுப்பதற்காக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பகடைக்காயாக்கிக்கொண்டிருப்பதேயாகும். தொடர்ந்து இவர்கள் ஏமாற்றுவதை எங்களால் அனுமதிக்கமுடியாது.
எமது தமிழர் உரிமைக்கான போராட்டம் என்பது இலங்கைக்கு அப்பால் சர்வதேச சமூகத்திடம் சென்றிருக்கிறது. சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் இலங்கை அரசாங்கம் பேசிக்கொண்டிருகின்றது. தொடர்ந்தும் அரசாங்கம் எங்களை ஏமாற்றிக்கொண்டிருக்குமாக இருந்தால் பேச்சுவார்த்தையிலிருந்து விலகிச்செல்வது தவிர்க்க முடியாததாக இருக்கும்.
கடந்த 62வருட காலத்திலே எமது மிதவாத அரசியல் தலைவர்கள் நடத்திய அகிம்சைப் போராட்டம் .அதற்குப் பின் நடந்த ஆயுதப்போராட்டம் என்பவற்றிலிருந்து வித்தியாசமாக அரசாங்கம் எங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுத்தரும்படி சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்கின்ற நடவடிக்கையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுப்பது தவிர்க்க முடியாது போகும்.
வடக்கு கிழக்கு மக்களுடன் புலம்பெயர்ந்த மக்களையும் அணிதிரட்டி மாபெரும் அகிம்சை ரீதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை. இந்த வழியை இலங்கை அரசாங்கம் எம்மீது சுமத்துமாக இருந்தால் அதை சகித்துக்கொள்ள வேண்டிய தேவை அதற்கு இருக்கிறது. சுர்வதேசத்திற்கும் இருக்கின்றது.
ஏனென்றால் ஆயுதப்போராட்டத்தை அடக்கியதாக கூறும் 20 நாடுகளுக்கும் எமது தமிழ் மக்களுக்கான உரிமையை தர வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. போராட்டத்தை அடக்கிவிட்டு அவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தரவேண்டிய காலகட்டத்தில் அவர்கள் இருக்கின்றார்கள்.
இந்த 2012ஆம் ஆண்டு அந்த காலகட்டத்தில் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பயணித்துக்கொண்டிருக்கின்றது. புல விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எங்கள் மீது சுமத்தப்படுகின்றது.
ஜனாதிபதியை எந்த வகையில் தென்னிலங்கை சிங்கள் மக்கள் ஆதரித்து தலைமை தாங்க விட்டார்களோ அதே வகையில் வட கிழக்கிலே இருக்கின்ற தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குவதற்குரிய ஆணையை தந்திருக்கின்றார்கள்.
அந்த ஆணையை சோரம் போகாமல் தொடர்ந்து பாதுகாக்கவேண்டிய கடப்பாடு இந்த 2012ஆம் ஆண்டு எங்களுக்கு இருக்கின்றது.
இன்று எமது மண் பறிபோய்க்கொண்டிருக்கின்றது இகலை கலாசார விழுமியங்கள் சீரழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன இவரலாறு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்த மண்ணை, வரலாறுகளை பாதுகாக்கவேண்டுமாக இருந்தால் ஆசிரியர்கள் எமது மாணவர்களுக்கும் இளம் சமூகத்தினருக்கும் எமது பாரம்பரிய கலாசாரங்களையும் வரலாற்று விழுமியங்களையும் சொல்லிக்கொடுக்கக் கூடிய கல்வியாக எமது கல்வியை மாற்றவேண்டும்.
அரசியல் என்பதும் அபிவிருத்தி என்பதும் வேறல்ல. அபிவிருத்திக்காக அரசியல் கொள்கையை விட்டுவிடவும் நாம் தயாரில்லை.
அரசாங்கம் தொடாந்து எம்மை ஏமாற்றுமானால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை!
பதிந்தவர்:
தம்பியன்
17 January 2012



0 Responses to அரசாங்கம் தொடாந்து எம்மை ஏமாற்றுமானால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை!