Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென்னாபிரிக்க அரசின் ஆழும் கட்சியாக உள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் நூறாவது ஆண்டு விழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது யாவரும் அறிந்த விடையமே. இவ் விழாவில் கலந்துகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மற்றும் புலம் பெயர் தமிழர் அமைப்பான உலகத் தமிழர் பேரவை(GTF) க்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இவ்வமைப்பின் நிகழ்வில் கலந்துகொண்டால் தாம் பங்கேற்க்கப்போவது இல்லை என முதலில் இலங்கை அரசு தெரிவித்தது. இருப்பினும் தென்னாபிரிக்க அரசை பகைப்பது நல்லதல்ல என இலங்கைக்கு சில புத்திஜீவிகள் தெரிவித்ததை அடுத்து இலங்கை அரசு இறுதிநேரத்தில் தனது சார்பாக சிலரை அனுப்பியது.

ஆனால் இலங்கை அரசு அனுப்பிய பிரதிநிதிகளை தென்னாபிரிக்க அரசு சாதாரண தூதுவர்களுக்கு கொடுக்கும் மரியாதையைக் கொடுத்து சாதாரண பாஸ் மூலம் உள்ளே நுளைய அனுமதித்தது. ஆனால் உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கு அதி முக்கியமானவர்களுக்கான பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்புச் சலுகைகளுடன் கூடிய இந்தப் பாஸைக்(VIP) கொடுத்து தென்னாபிரிக்க அரசு அவர்களை மதித்துள்ளது. இது புலம்பெயர் தமிழர்களுக்கும் அவர்கள் போராட்டத்திற்க்கும் கிடைத்த பெரு மதிப்பாகக் கருதப்படுகிறது.

தென்னாபிரிக்க அரச விருந்தினர்களுள் அதி முக்கிய விருந்தினர் வரிசையில் உலகத் தமிழர் பேரவைக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அமெரிக்க கனடா பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலிய தூதுவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதே மரியாதை இவ்வமைப்புக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் முந் நாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தென்னாபிரிக்கா சென்றவேளை அவருக்கு அரச மரியாதை அளிக்கப்பட்டு ஒரு நாட்டின் தலைவர் போல அவரை பொலிசார் பாதுகாப்போடு அழைத்துச் சென்றார்கள். அதேபோன்ற ஒரு நிகழ்வே தற்போதும் நடைபெற்றுள்ளமை தமிழர்களை பெருமிதமடைய வைத்துள்ளது. தமிழர் மத்தியில் ஒரு நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது எனலாம்!


அதிர்வு

0 Responses to தென்னாபிரிக்க அரசின் VIP விருந்தாளிகளாகச் சென்ற உலகத் தமிழர் பேரவையினர்! (காணொளி)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com