Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனல் - 4 தொலைக்காட்சி வெளியிட்ட, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை இந்த ஆண்டின் நோபல் சமாதானப் பரிசுக்கு தெரிவு செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும், அவுஸ்ரேலியாவின் கிறின் சென்ட்டர் லீ றியனோனும் இணைந்து நோர்வேயின் நோபல் பரிசுக் குழுவுக்கு இந்தப் பரிந்துரையை அனுப்பியுள்ளனர்.

சரியான நேரத்தில் சனல்-4 வெளியிட்ட இந்த ஆவணப்படம் இலங்கை அரசின் அனைத்துலக மனித உரிமை மீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாகவும், இது இலங்கையில் உள்ள எல்லா மக்களுக்கும் உண்மை, நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றுக்குப் பங்களிப்பு செய்துள்ளதாகவும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மக் டொனா தெரிவித்துள்ளார்.

சனல் - 4 தொலைக்காட்சியில் ஆவணப்படத்தை நோபல் பரிசுக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதன் மூலம், இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து உலகின் கவனத்தை ஈர்ப்பதுடன், அங்கு நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நீதியையும், அமைதியையும் கொண்டு வரும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to "கொலைக்களம்" நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com