திருச்சியில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘’பா.ம.க. நிறுவனர் ராமதாசு புதிய அரசியல், புதிய பாதை, புதிய நம்பிக்கை என்ற கோட்பாட்டில் வரைவு செயலாக்க திட்ட அறிக்கையை வெளியிட்டு மக்கள் கருத்து கேட்பு நடத்தி வருகிறார். இதன் இறுதி அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.
இந்த கூட்டங்களை இதுவரை 19 மாவட்டங்களில் நடத்தி உள்ளோம். திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. தமிழ்நாட்டை கடந்த 45 வருடங்களாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. ஆனால் எந்த வளர்ச்சியும் எற்படவில்லை. இன்னும் 10 வருடங்களில் தமிழ்நாட்டில் ஒருவர் கூட குடிக்காமல் இருக்க மாட்டார்கள் என்று நிலையைதான் ஏற்படுத்தி உள்ளனர்.
பா.ம.க. இனி ஒரு போதும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்காது. 15 வருடங்களாக செய்த தவறை இனி செய்ய மாட்டோம். 2014 பாராளுமன்ற தேர்தல் 2016 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் தனி அணி அமைப்போம். அதில் எந்தந்த கட்சி சேரும் என்று இப்போது கூற முடியாது.
திராவிட கட்சிகளை தவர மற்றவர்கள் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கூறுவது, ஏற்புடையது அல்ல. உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் பெற்ற வெற்றி உண்மையான, வெற்றி அல்ல.
பா.ம.க.வுக்கு தமிழ்நாடு முழுவதும் எழுச்சி ஏற்பட்டு உள்ளது. இளைஞர்கள் ஆதரவை ரகசியமாக திரட்டி வருகிறோம். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் இலவச கல்வி, தரமான மருத்துவம், சுகாதாரம், ஆகியவை மட்டுமே இலவசங்காக இருக்கும். இலவசங்களை கொடுக்க விட்டால் மக்கள் ஆதரவு தர மாட்டார்கள் என்பது தவறான கருத்து.
தமிழ்நாட்டுக்கு ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இதில் 60 சதவீத கடன் இலவச திட்டங்களுக்கு செலவிடப்பட்டு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் இலவச திட்டஙளுக்கு ரூ.85 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு உள்ளது.
இதில் 30 சதவீதம் மின் உற்பத்திக்கும், 20 சதவீதம் போக்குவரத்து கழகதிற்கும், 20 சதவீதம் பால் உற்பத்திக்கும் செலவிட்டுருந்தால் பற்றாக்குறைகள் ஏற்பட்டு இருக்காது.
5 முறை கருணாநிதியும், 3 முறை ஜெயலலிதாவும் முதல்- அமைச்சராக இருந்து விட்டார்கள். இனி படித்தவர்கள், பாட்டாளிகள் தான் முதல்-அமைச்சராக வருவார்கள்.
சட்டமன்றத்தில் விஜயகாந்த் மீதான நடவடிக்கை தவறு என கருணாநிதி கூறியுள்ளார். சட்டமன்றத்தில் யார் ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு அளிக்கப் படுவதிவில்லை.
சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேசுவதற்கு தான் அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும். அதே நேரத்தில் எதிர் கட்சி தலைவர் பதவி என்பது அமைச்சர் அந்தஸ்து உடையது. அதை உணர்ந்து சட்டசபையில் பேச வேண்டும். காமிராவை பார்த்தும், சவால் விடுவது போலவும் பேச கூடாது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிட வில்லை. தானே புயல் பாதித்த பகுதிகளில் விவசாயிகள் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ- மாணவிகள் தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்’’ என்று கூறினார்.
சட்டசபையில் காமிராவை பார்த்து சவால் விடுவது போல பேச கூடாது: அன்புமணி
பதிந்தவர்:
ஈழப்பிரியா
06 February 2012



0 Responses to சட்டசபையில் காமிராவை பார்த்து சவால் விடுவது போல பேச கூடாது: அன்புமணி