Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒரு தேசிய இனத்திற்கு சிறப்பைத் தருகின்ற ஒழுக்கம் என்பது அத்தேசிய இனத்தின் பண்பாட்டையும் அச்சமுகத்தினுடைய மனிதர்களின் நடத்தையையும் அறமும் நேர்மையும் தவறாது வளைந்துகொடாத வாழ்க்கை முறையை கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் நடத்தப்பட்ட தேசிய வாசிப்பு மாத நிகழ்வின், இறுதி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் பிரதேசசபை தலைவர் நாவை குகராசா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் கல்விப் பணிப்பாளர் ப.அரியரத்தினம், முன்னாள் அதிபரும் கரைச்சி கிராம சபையின் தலைவருமான நாகலிங்கம், சேவாலங்கா நிறுவன திட்ட பணிப்பாளர் கரைச்சி பிரதேசபையின் முன்னாள் ஆணையாளர் பொன்.நித்தியானந்தன், கரைச்சி பிரதேச சபையின் உப தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என கல்விப்புலம் சார்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மாவை சேனாதிராசா தொடர்ந்து குறிப்பிடுகையில்,

ஒழுக்கத்தை எமது இனம் சரிவரக் கடைப்பிடித்து வருகின்ற காரணத்தினாலேதான் ஜனநாயகம் தழுவி தர்மம் தவறாமல் எமது அரசியல் பாதையை செதுக்கி செல்கின்றோம். வாசித்தல் கற்றறிதல் தேடல் என்பவை தனிமனித ஒழுக்கத்தை மட்டும் மேம்படுத்துபவவை அல்ல.

அது ஒரு சமுகம் தழுவிய செயற்பாடு வாசித்தல் தேடல் ஊடாக ஒரு சமுகம் எய்துகின்ற பெறுபேறுகள் அச்சமுகத்தின் நாகரிகத்தை முதிர்ச்சியை வெளிப்படுத்தி நிற்கின்றது. இதைத்தான் வள்ளுவன் அன்று ஒழுக்கம் ஒரு சமுகத்திற்கு விழுப்பம் தருமாக இருந்தால் அதை உயிருக்கும் மேலானதாக கருதுங்கள்.

அந்த வள்ளுவன் சொன்னவார்த்தையை உயர்வாக எண்ணியதாலேதான் எங்களுடைய இளவல்கள் ஆயிரமாயிரம் இந்த மண்ணிற்கு தமது தமது உயிர்களை தந்தார்கள்.ஆகவே எம் சமுகத்தில் தனிமனித ஒழுக்கம் மாத்திரமல்ல அரசியல் ஒழுக்கமும் கூடவே இருக்கின்றது.

ஆனால் இன்று நாட்டினுடைய தலைவர் வந்து நிற்கின்றார். ஜனநாயகம் என்ற அரசியல் ஒழுக்கத்தினூடாக வடக்கு கிழக்கு எங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்திருக்கின்றார்கள்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற கூட்டத்திற்கு முறைப்படி எமக்கு அழைப்பில்லை ஜனாதிபதியினால் கூட்டப்படுகின்ற கூட்டமொன்றை ஜனாதிபதியின் செயலாளரே எமக்கு ஏமக்கு அறிவிக்கப்படவேண்டும்.ஆனால் எந்த திட்ட முன்வரைபுகளையும் சாத்தியகூற்று அறிக்கைகளையும் எம்மிடமிருந்து பெறவிருப்பமற்ற வகையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனநாயக ஒழுக்கத்தை அப்பட்டமாக மீறுகின்ற வகையில் காரியங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஒரு அரசன் அந்த குடிமக்களின் பிரதிநிதிகளை வேண்டத்தகாதவர்களாக இந்த ஒழுக்கமுறையை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்புக்களை மக்களின் ஆசைகளை அரசியல் விருப்பங்களை ஏற்று அங்கீகரிக்கின்ற ஒழுக்கம் ஒன்று அரசாங்கத்திடம் ஏற்படாதவரை இலங்கைத்தீவில் பகை முரண்கள் கூர்மையடையுமே தவிர குறைவடையப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜனநாயகம் தழுவி தர்மம் தவறாமல் எமது அரசியல் பாதையை செதுக்கிச்செல்கிறோம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com