Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிரடி கைதுக்கு ஆளாகி இருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு. புலிகளுக்கு ஆயுதம் கடத்திய வழக்கில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திடீரென வன்னி வளைக்கப்பட்டது அந்தக் கட்சியைப் பரபரக்க வைத்திருக்கிறது.

பெனின்சுலா ஹோட்டலில் தங்கி இருந்த வன்னி அரசை பொலிஸ் வளைத்துக் கொண்டிருந்தபோது, கிடைத்த சந்தர்ப்பத்தில் நம்மோடு பேச அவருக்கு அவகாசம் கிடைத்தது.

ஆயுதம் கடத்தியதாக போடப்பட்ட வழக்கை நான் முறையாக எதிர்கொண்டு வருகிறேன். அப்படியிருக்க திடீரென பொலிஸ் இவ்வளவு கெடுபிடி காட்டி என்னை வளைக்க என்ன அவசியம் வந்தது?

ஸ்ரீலங்கா நிறுவனத்தை தோல்பொருள் கண்காட்சியில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது எனக்கோரி, டிரேட் சென்டர் எனப்படும் சென்னை நந்தம்பாக்கம் வணிக வளாகத்தில் நாங்கள் நடத்திய போராட்டம்தான் அரசை இந்த அளவுக்கு ஆவேசப்படுத்தி இருக்கிறது.

நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கோரத் தாண்டவம் ஆடி தமிழர்களைக் கொன்று அழித்த சிங்களவர்கள், வணிகத்துக்காக தமிழகத்தில் கால் வைப்பதை எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்?

நியாயமாக, இதனைத் தமிழக அரசே தட்டிக்கேட்டிருக்க வேண்டும். தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல், ஸ்ரீலங்கா நிறுவனத்தை எதிர்த்துப் போராடிய எங்களை நசுக்கும் விதமாகவே இந்தக் கைது நடக்கிறது.

டிரேட் சென்டரில் ஏற்றப்பட்டிருந்த சிங்களக் கொடி, தமிழ் உணர்வாளர்களால் அறுத்து எரிக்கப்பட்டதைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் இந்தக் கைது நடவடிக்கையை என் மீது பாய்ச்சி இருக்கிறார்கள்.

தமிழர்களின் உணர்வுக்கும் துயரத்துக்கும் செவிமடுக்காத இந்த அரசு, சிங்கள வெறியர்களுக்கு விசிறி வீசுகிற நிலையை எங்கே போய்ச் சொல்வது?

இங்கே புதிய அரசு அமைந்த உடன் ஈழத்துக்கு ஆதரவான நிலைப்பாடு உருவாகி விட்டதாக முழங்கியவர்கள் இந்தக் கைது நடவடிக்கைக்கு என்ன சொல்கிறார்கள்?

ஆரம்பம் தொட்டே ஈழம் என்கிற வார்த்தைக்கு எதிராக நிற்கும் அ.தி.மு.க., சிங்களக் கொடியை எரித்ததற்காக என்னை சிறைப்படுத்துவதில் எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை! என்றவர், பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் இதையும் சொன்னார்.

இந்த ஆட்சியில், தமிழ் உணர்வாளர்களை நசுக்கும் கைதுகள் மட்டும் அல்ல... ஊருக்கு ஊர் சிங்களக் கொடியை ஏற்றி, அதற்குக் காவலாகத் தமிழக பொலிஸை நிற்க வைத்து, சிங்கள அரசைக் குளிர்விக்கும் நடவடிக்கைகள் நடந்தாலும் ஆச்சரியம் இல்லை!

0 Responses to சிங்களக் கொடியை எரித்ததால் என்னைக் கைது செய்கிறார்கள்!: வன்னி அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com