தமிழ் மக்களுடன் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் நோர்வேயின் பர்கன் நகரில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் சனிக்கிழமை பர்கன் நகரின் Loddefjord Kultursal (Vannkanten) ல் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் நாடுகடந்த தமிழீழு அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த கருத்துப்பரிமாற்றம் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு நோர்வேயிலிருந்து தெரிவு செய்யப்பட்ட திரு தோமஸ் அலோசியஸ் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகத்துறை துணை அமைச்சர் திரு. சுதன்ராஜ் பிரான்சிலிருந்து வருகை தந்து இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. வி.ருத்ரகுமாரன் காணொலி ஊடாக உரையாற்றவுள்ளதுடன், மக்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளார்.
சிறப்புரைகள், கலந்துரையாடலுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
ஆர்வமுள்ள அனைவரையும் இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்த துணை நிற்குமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.
மேலதிக தொடர்புகளுக்கு:
தோமஸ் அலோசியஸ்,
நாடு கடந்த தமிழீழ அரசாங்க நோர்வே பிரதிநிதி,
தொலைபேசி: 004791668547



0 Responses to நோர்வே பர்கனில் தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம்